இஸ்லாத்தின் பார்வையில் உயிரியல்

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

இஸ்லாத்தின் பார்வையில் உயிரியல்

உயிரற்ற பொருட்களிலிருந்தே உயிரினங்கள் யாவும் படைக்கப்பட்டன உயிரற்ற பொருட்கள் எனக் கூறும்போது கல்லும் மண்ணும் முதற்கொண்டு கோள்கள், மற்றும் நட்சத்திரங்கள்வரை ஏராளமான பொருட்கள் நமது கண்ணெதிரே வருகின்றன. இவை யாவும் பல்வேறு வகையான உயிரற்ற பொருட்களின் திரட்சியால் உருவானவை. உயிரற்ற பொருட்களான ஒரு கல்லையோ ஒரு துளி மண்ணையோ தனித்தனி பொருட்களாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரிக்கப்பட்ட பொருட்களை வெவ்வேறு மூலகங்களாக வகைப்படுத்தவும் செய்யலாம்.

இப்பேரண்டத்திலுள்ள அனைத்து உயிரற்ற பொருட்களும் இவ்வாறு மூலகங்களால் (மீறீமீனீமீஸீts) உருவானவைகள். வேறு வார்த்தையில் கூறினால் மூலகங்களின் திரட்சியே பொருட்களாகும். இருபதாம் நூற்றாண்டில் உயிர் இரசாயனவியலில் (ஙிவீஷீநீலீமீனீவீstக்ஷீஹ்) ஏற்பட்ட கண்டுபிடிப்புக்கள், உயிரினங்கள் யாவும் உயிரற்ற மூலகங்களிலிருந்து தோற்றுவிக்கப் பட்டிருப்பதைக் கூறுகிறது. மொத்தமுள்ள 94 மூலகங்களில் பெரும்பாலனவை உயிரினத் தோற்றத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இதில் தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் இடையில் சிறிதளவு வேறுபாடுகளும் உண்டு. தாவரங்களில் ‘போரேன்’ மற்றும் சிலிக்கன் போன்றவை உள்ளது. விலங்கினங்களுக்கு இவை தேவையில்லை. மனித இனத்தை அறிவியலாளர்கள் விலங்கின் பேரரசில் (கிஸீவீனீணீறீ ளீவீஸீரீபீஷீனீ) சேர்த்துள்ளார்கள். விலங்கின் உடலைத் தோற்றுவித்த மூலப்பொருட்கள் (மூலகங்கள்) மனித உடலையும் தோற்றுவிக்கப் பயன்பட்டுள்ளது. மனித உடலைத் தோற்றுவித்த உயிரற்ற மூலகங்களும் அவை எந்தெந்த அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதையும் பெட்டிச் செய்தியில் பார்க்கவும் இதுவரை கூறப்பட்ட செய்திகளிலிருந்து உயிரற்ற பொருட்களைக் கொண்டே உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன எனும் திருக்குரஆனின் கூற்று முற்றிலும் உண்மை என்பது நிரூபனமாகிறது.

நவீன அறிவியல் உலகின் பகுப்பாய்வுகளிலிருந்து மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான இந்த உயிரியல் இரகசியத்தை, பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு நுன்னோக்கி (விவீநீக்ஷீஷீsநீஷீஜீமீ) கூட கண்டு பிடிக்கப்படாத காலத்தில் திருக்குர்ஆனுக்கு இதைக் கூறுவது எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதை, உன்மையைத் தேடும் அன்பர்கள் சிந்திக்க கடமைப் பட்டுள்ளார்கள். நாத்திகர்கள் கூறுவது போல் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரால் திருக்குர்ஆன் தோற்று விக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற அறிவியல் உண்மைகள் அதில் இடம் பெற்றிருக்குமா? ஆகவே திருக்குர்ஆன் கூறிய இந்த அறிவியல் உண்மையும், வழக்கம்போல் திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என்பதற்கு மீண்டும் சான்றளிக்கிறது.

Source: unarvu ( 19/5/17 )