தொடர்ந்து கருவறுக்கப்படும் தலித் பெண்கள்: தீர்வுதான் என்ன?
தொடர்ந்து கருவறுக்கப்படும் தலித் பெண்கள்: தீர்வுதான் என்ன?
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் தலித் சகோதரிகள் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு ஆளாக்கப்பட்டு கருவறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் நந்தினி என்ற தலித் சகோதரி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்; இதுபோல இந்தியா முழுவதும் தினம் தினம் தலித் பெண்களுக்கு இந்தக் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேடை நாடகம் பார்க்கச் சென்ற இளம் தலித் பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடந்த 04.03.17 சனிக்கிழமை அன்று போலீஸ் தரப்பில், “உத்தரப் பிரதேச மாநிலம் நாரேனி பகுதியைச் சேர்ந்த இளம் தலித் பெண் ஒருவர் நாடகம் பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை 03.03.17 அன்று இரவு சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணை பப்பூ என்பவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டால் கற்பழித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது என்பது குதிரைக் கொம்புதான்; தற்போது உ.பி.யில் தேர்தல் நேரமாக இருப்பதால்தான் உடனடியாக வழக்குப்பதிவு செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. தலித் பெண்கள் குறிவைத்து கற்பழிக்கப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் காரணம் தாழ்த்தப் பட்டவர்களை எதுவும் செய்யலாம்; கேட்க நாதியில்லை என்ற மனப்பான்மைதான் உயர் சாதியினர் இதுபோன்ற கொடூர வேளைகளை செய்ய காரணமாக இதுவே அமைந்துள்ளது.
அதனால் தான் தலித் பெண்கள் குறிவைத்து காம வெறி பிடித்த மிருகங்களால் வேட்டையாடப் படுகின்றார்கள். இந்த நிலை மாற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்; கற்பழித்தவனுக்கு 10ஆயிரம் உதவித்தொகையும், ஒரு தையல் மிஷினும் வழங்கும் நிலை மாற வேண்டும்
. இஸ்லாம் சொல்லக்கூடிய கடுமையான தண்டனைகள் அந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். தலித்துகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு எத்தனை காலம்தான் இவர்கள் இப்படியே அடிமைப்பட்டே கிடக்கப் போகின்றார்கள்? இஸ்லாம் அவர்களை அன்போடு அழைக்கின்றது; சத்திய மார்க்கத்தில் சமரசம் தேடி அவர்கள் இணைந்தால் இழிவிலிருந்து மீளலாம். மறுமை வெற்றியும் கிடைக்கும்; தலித் சகோதர, சகோதரிகள் சிந்திப்பார்களா?
Source : unarvu ( 10/03/17 )