சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல்

ஃபலஸ்தீனத்தின் ஒரு பகுதியான மேற்கு கரைப் பகுதியின் பெரும் பகுதியை 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. இதுபோல் கிழக்கு ஜெருசலேம் பகுதியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. இந்த இரு ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் 140 குடியிருப்புகளை கட்டி, அங்கு 6 லட்சம் யூதர்களை இஸ்ரேல் குடியமர்த்தியுள்ளது.

இந்தக் குடியிருப்புகள் அனைத்தும் சர்வதேச சட்டப்படி சட்ட விரோதமானவை. இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு குறித்து இஸ்ரேல் பாராளு மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் மேற்குக் கரையின் ஆக்கிரமிப்பு பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட 3800 வீடுகளை சட்டப்பூர்வமாக்குவது என்றும், இந்த குடியிருப்புகள் கட்டப்பட்ட மனையின் சொந்தகாரர்களுக்கு இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 60 ஓட்டுகளும், எதிராக 52 ஓட்டுகளும் விழுந்தன.

இதனால் இந்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இஸ்ரேல் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த மசோதாவாக இருந்தாலும் அது இஸ்ரேல் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் செல்லும். இல்லையேல் செல்லாததாகி விடும். இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் அட்டர்னி ஜெனரல் இந்த சட்டம் – இஸ்ரேலின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இந்த சட்டம் குறித்து இஸ்ரேல் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் இதில் அரசு சார்பாக நான் வாதிட மாட்டேன் என்றார். இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவரான யிட்ஜெக் ஹெல்ஜாக் கூறும்போது இந்த சட்டம் – இஸ்ரேலுக்கு ஆபத்தான சட்டம் திஹேகச்நகரில் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த சட்டத்தை வைத்து இந்தக் கிரிமினல் நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்றார்.

இப்படி ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் தொடர்பாக இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள சட்டத்துக்கு இஸ்ரேல் நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அப்படி இருக்கும்போது இதற்கு பாலஸ்தீனர்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு பற்றி சொல்லவா வேண்டும்? இஸ்ரேலின் இந்த சட்டம் எங்கள் நாட்டை உருவாக்க தடையாக உள்ளது. மேலும் அமைதிக்கு இது பெரும் கேடு இழைப்பதாக உள்ளது. இதனை எங்களால் ஒரு நாளும் ஏற்க இயலாது என்று ஒட்டு மொத்த பாலஸ்தீன மக்களும் கூறுகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் இந்த சட்டம் குறித்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க ஆராய்ந்து வருவதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. அதனால் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் இஸ்ரேல் ஆட்சியாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் மதிப்பு உலக அளவில் உயர்ந்து அத்துமீறும் ஆட்சியாளர்கள் பயப்படும் நிலை ஏற்படும்.

இவ்வாறு தனது மதிப்பு உயரும் வகையில் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும். மேலும் சர்வதேச சட்டத்திற்கு எதிராக நடந்து கொண்டுள்ள இஸ்ரேல் மீது ஐ.நா.வும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்து, உலக அரங்கில் அந்நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இப்படிச் செய்ய ஐ.நா.தவறினால் அதன் மதிப்பு படுபாதாளத்தில் வீழ்ந்து விடும். இரான், வடகொரியா ஆகிய நாடுகள் மீது கடந்த காலங்களில் ஐ.நா. கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது போன்ற நடவடிக்கை இஸ்ரேல் மீதும் எடுக்கப்பட வேண்டும். எடுக்கத் தவறினால் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக ஐ.நா. இருக்கிறது என்ற எண்ணம் உலக நாடுகளிடம் ஏற்பட்டு, ஐ.நா.வை விட்டு உலக நாடுகள் வெளியேறும் நிலை ஏற்படும். இதற்கு ஐ.நா. இடம் கொடுக்கப் போகிறதா? அல்லது இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுத்து, தனது கௌரவத்தை அது காப்பாற்றிக் கொள்ளப் போகிறதா? அது ஐ.நா எடுக்கும் நடவடி.

Source : unarvu ( 17/02/2017 )