சிலைகளுக்கு சக்தியில்லை என நிருபிக்கும் சிலை திருடர்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சிலைகளுக்கு சக்தியில்லை என நிருபிக்கும் சிலை திருடர்கள்

சிலை கடத்தலை தடுக்கா விட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.மகாதேவர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கோவில்களில் உள்ள சிலைகள் களவாடப்பட்டு, பின்னர் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த சிலை திருட்டில் பூசாரிகள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் என பலரும் ஈடுபட்டு மாட்டியுள்ளனர்.

கற்களால் சாதாரணமாக செய்யப்பட்ட சிலைக்கு எப்படி சக்தி இல்லையோ அதுபோல் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கும் எந்த சக்தியும் கிடையாது. இதை சிலை திருடுபவர்கள் நன்கு உணர்ந்திருப்பதால் தான் சிலை திருட்டில் துணிச்சலாக ஈடுபடுகின்றனர். அதுபோல் சிலைக்கும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தி கிடையாது. அதனால் தான் திருடர்கள் சிலை திருடும் போது அது எந்த ரியாக்ஷனும் காட்டுவதில்லை.

கோவிலில் உள்ள சிலைக்கு எந்த சக்தியும் இல்லை என்று சிலை திருடுபவர்கள் உணர்ந்திருப்பது போல பொது மக்களும் இந்த உணர்வைப் பெற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். சிலை வணக்கம் என்பது கடவுள் நம்பிக்கை அல்ல. அது மூடநம்பிக்கையாகும். கடவுள் அற்பமான விந்துத் துளியில் இருந்தும், சிலை மூட்டையில் இருந்தும் மனிதனைப் படைக்கிறார். கோவிலில் உள்ள சிலைகளை மனிதனே வடிக்கிறார். அப்படி இருக்கும் போது சிலைக்கு சக்தி உண்டு என்று நம்புவதும், அந்த சிலையை வைத்து பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளை வளர்ப்பதும்

கடவுள் கொள்கைக்கு எதிரான செயல் என்பதை மக்கள் உணர வேண்டும். சிலை திருடர்களுக்கு உள்ள அந்த பகுத்தறிவு கூட சிலை திருட்டில் ஈடுபடாத நல்ல மக்களுக்கு இல்லை என்பது கைசேதமாகும். கண் கொண்டு பார்க்கும் மனிதன் சிலை பார்க்கிறது என்று நம்புவானா? காது கொண்டு கேட்கும் ஒருவர் சிலை கேட்கிறது என நம்புவானா? பேசும் சக்தி படைத்த மனிதன் சிலை பேசுகிறது என நம்பலாமா? உடல் அசைவு கொண்ட மனிதன் சிலைக்கு எல்லா சக்தியும் உள்ளது என்று நம்பலாமா?

இப்படி நம்புவது பகுத்தறிவுக்கு எதிரானது என்று இருந்த போதும் பெரும்பாலான மக்கள் இந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. இந்தியாவைச் சேர்ந்த மிகப் பெரிய விஞ்ஞானியும் கூட இந்த நம்பிக்கையில் இருப்பது தான் மிகவும் கொடுமையான ஒன்று. சிலை திருட்டில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு இருக்கும் பகுத்தறிவு பார்வை கூட இவர்களுக்கு இல்லாமல் போனது ஏனோ? என கேட்காமல் இருக்க முடியவில்லை. கோவில்களில் உள்ள சிலைகள் களவு போவது குறித்து அறிந்த பிறகும் சிலைகளுக்கு சக்தி இல்லை என்று மனிதன் அறியத் தயங்குவது ஏனோ?

இறைத்தூதர் இப்ராஹிம் சிலைகளை உடைத்துக் காண்பித்து சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை என்று அக்கால மூடநம்பிக்கையாளர்களின் வாய்களாலேயே சொல்ல வைத்தார். அதுபோல் இக்கால சிலை திருடர்கள் கோவிலில் உள்ள பிரதிஷ்ட செய்யப்பட்ட சிலைகளை களவாடி விற்று, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை என்று மக்களுக்கு உணர்த்துகின்றனர். ஆனாலும் மக்கள் இதிலிருந்து படிப்பினை பெறுபவர்கள் இல்லை. சிலை வணக்கம் என்பது மூடநம்பிக்கையே அன்று இறைவழிபாடு அல்ல என்பதை மக்கள் அறிய வேண்டும்.

ஒரு மனிதனை கேலிச் சித்திரமாக வரைந்தால் சம்பந்தப்பட்ட மனிதனுக்கு கோபம் வரும். அதுபோல் கடவுளை கேலிச் சித்திரமாக்கும் கொடுமை தான் சிலை வணக்கம். சிலையை வணங்குவது சர்வ சக்தி படைத்த கடவுளை வணங்குவதற்கு ஒருக்காலும் ஆகாது என்பதை மக்கள் அறிய வேண்டும். இந்தியாவை பீடித்துள்ள பல பீடைகளுக்கு சிலை வணக்கமே தலையாய காரணியாகும். இந்த சிலை வணக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டால் இந்தியா உலகில் முதல் வல்லரசாக உருமாறும் என உறுதியாகச் சொல்லலாம்.

சிலை வணக்கம் இறைவணக்கமல்ல என்று புரிந்து கொள்வதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் போய் படிக்க வேண்டியதில்லை. சாதாரண பகுத்தறிவு இருந்தாலே அதை அறிந்து கொள்ள முடியும். சிலை வணக்கத்தை இறைவணக்கம் நம்பப் போய் தான் கோவிலில் தரப்படும் பூந்தி பிரசாதமாகவும், மாட்டின் மூத்திரம் கோமியமாகவும் தெரிகிறது. இன்னும் பல மூடநம்பிக்கைகள் இதன் விளைவாக ஏற்படுகின்றன. எனவே சிலை திருடர்களின் செயலைப் பார்த்த பிறகாவது சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை. சிலை வணக்கம் என்பது இறைவணக்கத்திற்கு எதிரானது என்ற உண்மை ஆன்மீகத்தை உள்வாங்கி நடக்க முற்பட வேண்டும். மக்கள் இதற்கு முன்வர வேண்டுமே!

Source : unarvu ( 27/07/2018 )