13) பயானுக்கு தயாராகுதல்

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

பயானுக்கு தயாராகுதல்

இந்த நூலின் இறுதி பகுதிக்கு வந்துவிட்டோம். இப்போது உங்களை ஒரு பயான் செய்ய அழைத்திருக்கிறார்கள். ஒரு சிறந்த உரைக்கு தேவையான திட்டமிடுதல், குறிப்புகளை எடுத்தல் மற்றும் பயிற்சி எடுத்தல் பற்றி பார்ப்போம். பயானை ஜந்து பகுதிகளாக பிரிக்கலாம்.

Motive      Data collection     Plan      Practice      Delivery

 

  • நோக்கம் மற்றும் விசாரிப்பு
  • குறிப்புகளை சேகரித்தல்
  • திட்டமிடுதல்
  • மனப்பாடம் செய்து, பயிற்சி எடுத்தல்
  • பாடிலாங்குவேஜ், ஏற்றஇறங்கங்களுடன் வெளிப்படுத்துதல்

 

u நோக்கம் மற்றும் விசாரிப்பு

பேசுவதற்கு பயான் தலைப்பை நிர்வாகிகள் உங்களிடத்தில் தெரிவிக்கும்போது, கீழ்காணும் விஷயங்களை கேட்டுதெரிந்துகொள்ளுங்கள்.

  • இந்த தலைப்பின் கீழ் என்னென்ன செய்திகளை பேசவேண்டும்?
  • அந்த இடத்தில் உள்ள மக்கள் எந்த கொள்கையில் உள்ளவர்கள்?
  • எதைப்பற்றி, யாரைப்பற்றி பேசக்கூடாது?
  • எவ்வளவு நேரம்? கேள்வி பதில் உள்ளதா?
  • அரங்கமா? மேடையா? மைக் உள்ளதா?

மேற்கண்ட கேள்விகளில் முதல் கேள்வி, தலைப்பின் கீழ் என்னென்ன பேசவேண்டும்? என்பது. அதாவது, மூடநம்பிக்கை என்ற தலைப்பின் கீழ், நூற்றுக்கணக்காக மூடநம்பிக்கைகளைப் பற்றி பேசமுடியும். எனவே, அந்த பகுதி மக்களிடத்தில் என்ன மூடநம்பிக்கை இருக்கிறதோ அதைப்பற்றி பேசி, அதன் உண்மை நிலையை விளக்குவதற்கு இந்த விசாரிப்பு மிகவும் அவசியம். இதனை செய்யாவிட்டால், நீங்கள் பேசியது சுவாரஸ்யமாக இருந்தாலும், அந்த பகுதி மக்களுக்கு பயன்படும் செய்திகளாக இருக்காது. இதில் மற்றுமொரு நன்மையும் இருக்கிறது, மக்களுக்கு எது தேவையோ, எந்த பிரச்சனையை தினமும் சந்திக்கிறார்களோ அதைப்பற்றி பேசும்போது தான், அதிக கவனம் செலுத்தி கேட்பார்கள். எனவே, “தொழுகை, நோன்பு” போன்ற விதிவிலக்கான ஒருசில தலைப்புகளைத் தவிர மற்ற எதற்கும் சுருக்கமாகவாவது விசாரித்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக, மக்கள் எந்த கொள்கையில் உள்ளவர்கள் என்பதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார்போல பேசுவது. இதைப் பற்றி, ”ஆடியன்ஸை தெரிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பில் முன்னரே விளக்கியுள்ளோம். மூன்றாவதாக, யாரைப்பற்றி பேசக்கூடாது என்பது. இது மிகவும் முக்கியமானது. ஒரு பகுதியில் ஏதாவது பிரச்சனை நடந்துகொண்டிருக்கும். காவல்துறை அது சம்பந்தமாக பேசவேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பார்கள். தேவையில்லாமல் அதைப் பேசி, பிரச்சனையை அதிகமாக்கிவிடக்கூடாது.

அடுத்ததாக, எவ்வளவு நேரம் பேசவேண்டும், கேள்விபதில் உள்ளதா? என்பது. பேசவேண்டிய செய்திகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கு இவை இரண்டும் முக்கியமானவை. இறுதியானது, பேசும் இடம், மக்கள் கூட்டம் மற்றும் மைக் பற்றியது. தற்போது பெரும்பாலான இடங்களில் மைக் இருக்கிறது. ஒரு வேளை இல்லாதிருந்தால், ஆக்ரோஷமான பேச்சை வெளிப்படுத்துவது சிரமமாக இருக்கும். பேசும் ஸ்டைலை தீர்மானிப்பதற்கு இவை தேவையானது.

இதுதவிர, ”இந்த ஊரில் பேய் பீதி இருக்கிறது, ஜோதிடத்தை நம்புகிறார்கள். மந்திரவாதி இருக்கிறார். அதைப்பற்றி பேசுங்கள்” என்பது போல எதாவது சொல்வார்கள். இதுபோன்று, தலைப்பைத் தாண்டி பேசவேண்டியது ஏதேனும் இருந்தால், எப்படியாவது ஒரு தொடர்பை உருவாக்கி நுழைத்துப் பேசிவிடவேண்டும். இறுதிநேரத்தில் இதுபோன்று சொன்னால், கோர்வை இல்லாமல் போகலாம். எனினும் இது விதிவிலக்கு. மக்களுக்காகத்தான் செய்திகளேயன்றி, நாம் குறிப்பெடுத்த செய்திகளுக்காக மக்கள் அல்ல.

தலைப்பு தரப்படாத ஜும்மாவிலும், ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக நடத்தப்படும் பெண்கள் பயானிலும், கடந்த மூன்று வாரங்கள் என்ன தலைப்பில் பேசப்பட்டது என்பதை தெரிந்து அந்த தலைப்பை தவிர்த்துக் கொள்ளுங்கள்.


v செய்திகளை சேகரித்தல் – குறிப்புகளை எடுப்பதற்கு சில வழிமுறைகள்.

அதிக அனுபவமுள்ள பேச்சாளர்கள் கூட, பெரும்பாலான நேரங்களில் பயானுக்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி குறிப்புகளை எடுத்து, நினைவில் நிறுத்தித் தான் பேசுகின்றனர், மனதில் இருப்பதைக் கொண்டு ஒப்பேற்றிவிடலாம் என்று வருவதில்லை. நபியின் பாசறையில் பாடம் பயின்ற, உமர்(ரலி) அவர்களே முக்கியமான பேச்சுக்காக, குறிப்புகளை தயாரித்து கொண்டார்கள்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاتَ وَأَبُو بَكْرٍ بِالسُّنْحِ قَالَ إِسْمَاعِيلُ يَعْنِي بِالْعَالِيَةِ فَقَامَ عُمَرُ يَقُولُ وَاللَّهِ مَا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ وَقَالَ عُمَرُ وَاللَّهِ مَا كَانَ يَقَعُ فِي نَفْسِي إِلَّا ذَاكَ وَلَيَبْعَثَنَّهُ اللَّهُ فَلَيَقْطَعَنَّ أَيْدِيَ رِجَالٍ وَأَرْجُلَهُمْ فَجَاءَ أَبُو بَكْرٍ فَكَشَفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَّلَهُ قَالَ بِأَبِي أَنْتَ وَأُمِّي طِبْتَ حَيًّا وَمَيِّتًا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُذِيقُكَ اللَّهُ الْمَوْتَتَيْنِ أَبَدًا ثُمَّ خَرَجَ فَقَالَ أَيُّهَا الْحَالِفُ عَلَى رِسْلِكَ فَلَمَّا تَكَلَّمَ أَبُو بَكْرٍ جَلَسَ عُمَرُ فَحَمِدَ اللَّهَ أَبُو بَكْرٍ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ أَلَا مَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لَا يَمُوتُ وَقَالَ إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ وَقَالَ وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ قَالَ فَنَشَجَ النَّاسُ يَبْكُونَ قَالَ وَاجْتَمَعَتْ الْأَنْصَارُ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ فَقَالُوا مِنَّا أَمِيرٌ وَمِنْكُمْ أَمِيرٌ فَذَهَبَ إِلَيْهِمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ فَذَهَبَ عُمَرُ يَتَكَلَّمُ فَأَسْكَتَهُ أَبُو بَكْرٍ وَكَانَ عُمَرُ يَقُولُ وَاللَّهِ مَا أَرَدْتُ بِذَلِكَ إِلَّا أَنِّي قَدْ هَيَّأْتُ كَلَامًا قَدْ أَعْجَبَنِي خَشِيتُ أَنْ لَا يَبْلُغَهُ أَبُو بَكْرٍ ثُمَّ تَكَلَّمَ أَبُو بَكْرٍ فَتَكَلَّمَ أَبْلَغَ النَّاسِ فَقَالَ فِي كَلَامِهِ نَحْنُ الْأُمَرَاءُ وَأَنْتُمْ الْوُزَرَاءُ فَقَالَ حُبَابُ بْنُ الْمُنْذِرِ لَا وَاللَّهِ لَا نَفْعَلُ مِنَّا أَمِيرٌ وَمِنْكُمْ أَمِيرٌ فَقَالَ أَبُو بَكْرٍ لَا وَلَكِنَّا الْأُمَرَاءُ وَأَنْتُمْ الْوُزَرَاءُ هُمْ أَوْسَطُ الْعَرَبِ دَارًا وَأَعْرَبُهُمْ أَحْسَابًا فَبَايِعُوا عُمَرَ أَوْ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ فَقَالَ عُمَرُ بَلْ نُبَايِعُكَ أَنْتَ فَأَنْتَ سَيِّدُنَا وَخَيْرُنَا وَأَحَبُّنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ عُمَرُ بِيَدِهِ فَبَايَعَهُ وَبَايَعَهُ النَّاسُ فَقَالَ قَائِلٌ قَتَلْتُمْ سَعْدَ بْنَ عُبَادَةَ فَقَالَ عُمَرُ قَتَلَهُ اللَّهُ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ عَنْ الزُّبَيْدِيِّ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ أَخْبَرَنِي الْقَاسِمُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ شَخَصَ بَصَرُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ فِي الرَّفِيقِ الْأَعْلَى ثَلَاثًا وَقَصَّ الْحَدِيثَ قَالَتْ فَمَا كَانَتْ مِنْ خُطْبَتِهِمَا مِنْ خُطْبَةٍ إِلَّا نَفَعَ اللَّهُ بِهَا لَقَدْ خَوَّفَ عُمَرُ النَّاسَ وَإِنَّ فِيهِمْ لَنِفَاقًا فَرَدَّهُمْ اللَّهُ بِذَلِكَ ثُمَّ لَقَدْ بَصَّرَ أَبُو بَكْرٍ النَّاسَ الْهُدَى وَعَرَّفَهُمْ الْحَقَّ الَّذِي عَلَيْهِمْ وَخَرَجُوا بِهِ يَتْلُونَ وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ إِلَى الشَّاكِرِينَ

நபியவர்கள் இறந்தபிறகு, நாட்டின் அதிபரை (கலீஃபாவை) தேர்ந்தெடுக்கும் நேரத்தில், அபூபக்கரை தேர்ந்தெடுக்க விரும்பி பேச எழுந்த உமர்(ரலி) அவர்களை அபூபக்கர் தடுத்து, உமரை தேர்ந்தெடுக்கப் பேசினார்கள். இருப்பினும், அபூபக்கரே கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். பின்னாளில் உமர்(ரலி) இதை நினைவு கூறும் போது, ”அல்லாஹ்வின் மீது ஆணையாக!, நான் பேச விரும்பியது ஏனென்றால், எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றை தயாரித்து வைத்திருந்தேன்” என்று கூறினார்கள். (புகாரி: 3668) எனவே, போதுமான நேரத்தை ஒதுக்கி பயானுக்காக குறிப்புகளை எடுத்து பேசுவது தான் சரியானது. குறிப்புகளை எடுக்க கீழ்காணும் வழிமுறைகளை கையாளலாம்.

  • குர்ஆன், ஹதீஸ், தப்ஸீர், ஆதராப்பூர்வமான நூல்களில், தேவையான தலைப்பின் கீழ் உள்ள செய்திகளை முதலில் குறித்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு, இதே தலைப்பில் பிற அறிஞர்கள் பேசிய வீடியோக்களை ஓடவிட்டு, ஓரிரு குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். மிகமிக முக்கியமாக, அவர்களின் தத்துவங்களை குறித்துக்கொள்ளுங்கள். தத்துவங்கள் என்றால் என்ன என்று முன்னரே விளக்கப்பட்டுள்ளது.
  • பிறகு, இணையதளத்தில் அந்த தலைப்பை டைப்செய்து, வரும் கட்டுரைகளில் ஆதாரப்பூர்வமானதா என சரிபார்த்து, அதிலிருந்தும் குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். (இணையதளத்தில் தேடும் முறை இந்த நூலின் இறுதியில் உள்ளது)
  • பிறகு, நம் கருத்துக்கு மாற்றுக்கருத்துடையவர்களின் கருத்துக்களையும், அவர்களின் வாதங்களையும் குறித்துக்கொண்டு, அதற்கு தேவையான மறுப்புகளையும் குறித்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு, அந்த தலைப்பை ஒட்டிய கேள்விபதில் பகுதியை பார்வையிட்டு. அதில் தேவையானதை குறித்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு, இன்றைய, நேற்றைய நாட்டுநடப்புகளை, செய்திகளை பார்வையிடுங்கள். தலைப்பிற்கு சம்பந்தமான செய்திகளை சேகரித்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு, இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான செய்திகள் ஒரிரண்டை தேடி எடுத்து குறித்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு, உருப்படியான ஆச்சர்யமான, அறிவியல்பூர்வமான வேறு தகவல்கள் ஒரிரண்டு எடுத்துக்கொண்டு, அமருங்கள்.
 

இஸ்லாமிய சாஃப்ட்வேர்கள் நிறுவப்பட்ட கனினியை வைத்துக்கொள்ளுங்கள். தகவல்களை சேகரிக்கும் பணி மிகவும் எளிதாக இருக்கும். பிரார்த்தனை என்ற தலைப்பிற்காக சேகரிக்கப்பட்ட குறிப்புகளைப் பாருங்கள்.


w குறிப்புகளை கோர்வையாக்குதல் மற்றும் திட்டமிடுதல்

கைநிறைய குறிப்புகள் இருக்கிறது என்று திட்டமிடுதலில் அலட்சியமாக இருக்கக் கூடாது. எந்த செய்தியை எதற்கு பின்னால் சொல்லவேண்டும் என்று கோர்வையாக்கிக் கொள்ளுங்கள். செய்திகளில் கோர்வை இருந்தால், செய்யும் பயானை புரிந்துகொள்வதற்கு குறைந்த மூளைத்திறனே போதுமானது.

சரியான வகையில் திட்டமிட்டு குறிப்புகளை சேகரித்து கோர்வையாக்கி, பயிற்சி எடுப்பதற்கு குறைந்தது ஒரு நாளாவது தேவைப்படும். எனவே, பயான் தலைப்பை குறைந்தபட்சம், ஒருநாள் முன்னதாகவே பெற்றுக்கொள்ளுங்கள். இரண்டு வருடத்திற்கு குறைவாக அனுபவம் உள்ளவர்களை கடைசி நாளில் பயானுக்கு அழைப்பதை நிர்வாகிகள் தவிர்க்கவேண்டும். குறிப்புகளை எடுப்பதற்கும், பயிற்சி எடுப்பதற்கும் தேவையான நேரத்தை கொடுக்காமல், அவர்களது பேச்சு சரியில்லை என்று சொல்வது நியாயமல்ல.

பேசும் உரைகளை, இயன்றஅளவு உரைகளை மூன்றாகவோ, நான்காகவோ பிரித்துக் கொண்டால் பேசுவதற்கு எளிதாக இருக்கும். மிகப்பிரபலமான பேச்சாளர்களும் இப்படித்தான் செய்கிறார்கள். குறிப்புகளை மூன்றாக நான்காக பிரிப்பதற்கு உள்ள ஒரு எளிய வழி, நீங்கள் பேச எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு எதிராக நான்கு கேள்விகளை கேளுங்கள். உதாரணமாக, பிரார்த்தனை என்ன தலைப்பின் மீதான கேள்விகளை பாருங்கள்.

  • பிரார்த்தனையின் நோக்கம் என்ன?
  • பிரார்த்தனை எப்படி செய்யவேண்டும்?
  • பிரார்த்தனை எப்படி செய்யக்கூடாது?
  • எந்த பிரார்த்தனை ஏற்கப்படும், எது ஏற்கப்படாது?

இது போன்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டு, அதற்குரிய பதில்களை ஒவ்வொரு உபதலைப்பாக பிரிப்பது பிரபலமான பலரும் பின்பற்றும் முறை. இந்த அடிப்படையில் சேகரிப்பட்ட குறிப்புகளை பிரித்ததையும், கோர்வையாக்கப் பட்டதையும் பாருங்கள்.

முன்னரே குறிப்பிட்ட படி குறிப்புகளை கோர்வையாக்கிய பின்னர், எங்கே நகைச்சுவையை நுழைப்பது, எந்த இடத்தில் ஓரிரு உலக சம்பவங்களை நுழைப்பது என்று தீர்மானித்து குறித்துக்கொள்ளுங்கள். இதன் முக்கியத்துவம் முன்னரே சொல்லப்பட்டுள்ளது.

Ì அனைத்து கோணங்களையும் அலசுதல்: எந்த தலைப்பை பேசினாலும், அதன் சட்டதிட்டங்ளை சொல்லிவிட்டு அது சம்பந்தமான மூடநம்பிக்கைகளையும், முரண்பாடுகளையும், விதிவிலக்குகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்தவேண்டும். இதில் கவனம் செலுத்தினால் உங்கள் உரை, தலைப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய உரையாக இருக்கும். தரமான பேச்சாளர் இதில் கவனம் செலுத்துவார்.

Ì தலைப்பிற்கு அப்பாற்பட்டதை நீக்குதல் (Filtration Process) : குறிப்புகளை சேகரித்த பின்னர், கோர்வையாக்கும் நேரத்தில் எந்தெந்த செய்திகள் தலைப்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று பார்த்து அவற்றை நீக்குங்கள். உங்கள் உரை தெளிவாக இருக்கவேண்டுமெனில் இதை செய்வது அவசியம்.

Ì கியூ காட்ஸ் (Cue Cards) என்பது என்ன? : கியூகாட்ஸ் என்பது கிட்டத்தட்ட விசிட்கார்டு (விலாச அட்டை) போன்று இருக்கும். ஒரு உரையில் நான்கு உபதலைப்புகள் உள்ளதெனில் நான்கு அட்டைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அட்டையிலும் ஒரு உபதலைப்பின் கீழ் உள்ள செய்திகளின் தலைப்பை மட்டும் பெரிய எழுத்துக்களில் எழுதி, அட்டைகளை வரிசையாக வைத்துக்கொண்டு, அவற்றை பார்த்து உரை நிகழ்த்தலாம். இது பெரும்பெரும் நிறுவனங்களின் இயக்குநர்கள் தங்களது புதுதொழில்நுட்பத்தை சந்தையில் அறிமுகப்படுத்தி விளக்கும் போது பயன்படுத்தும் முறை.

 

x மனப்பாடம் செய்தல் மற்றும் பயிற்சி எடுத்தல்

மனப்பாடம் மற்றும் பயிற்சி எடுத்தல், இரண்டு பிரிவுகளை உடையது.

  • Explain every note – ஒவ்வொரு குறிப்பையும் விளக்கி பயிற்சி எடுப்பது.
  • Memorize Order of notes – குறிப்புகளின் வரிசையை மனப்பாடம் செய்வது.

முதலில், எழுதிய ஒவ்வொரு குறிப்பையும் (every note) தனித்தனியாகப் பார்த்து, இதனை எப்படி மக்களிடம் விளக்கிப் பேசுவீர்களோ அதே போல, தனிமையில் பேசுங்கள். மறக்காமல் அதே தொனியில், அதே ஏற்றஇறக்கத்தோடு பேசிப்பாருங்கள். இவ்வாறு ஓரிரு தடவை பேசிப்பார்த்தால் போதுமானது. புதியவர்கள் நான்கைந்து தடவை பேசிப்பார்க்கலாம்.

இரண்டாவதாக, எழுதியுள்ள குறிப்பின் வரிசையை (Order of notes), மனப்பாடம் செய்து, இதற்கு பிறகு இது, இதற்கு பிறகு இது என்று உங்களுக்கு நீங்களே ஒப்புவித்து பாருங்கள். பேப்பரை பார்க்காமல் இரண்டு, மூன்று தடவை சொல்லிப் பார்க்கவும். புதியவர்கள் பத்து தடவையாவது சொல்லிப்பார்க்கவும். இதனையே பயிற்சி என்கிறோம்.

புதியவர்கள் செய்யும் மிகப்பெரும் தவறு, பயிற்சிக்கு நேரம் ஒதுக்காமல், இறுதிநேரம் வரை குறிப்புகளை சேகரித்துக்கொண்டே இருப்பது தான். இது கூடாது. மனப்பாடம் செய்து பயிற்சி எடுக்காவிட்டால், பயானில் குறிப்புகளை பார்த்துப்பார்த்து தான் பேசமுடியும். குறிப்புகளை பார்த்துப் பேசும் உரையை விட, மனப்பாடம் செய்து, பயிற்சி எடுத்து பேசும் உரை தெளிவாகவும், தடங்களின்றியும், உயிரோட்டமுள்ளதாகவும் இருக்கும். எனவே, மனப்பாடம் மற்றும் பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்துங்கள்.

பயிற்சி எடுக்கும் நேரத்தில், எந்த செய்தியை ஆக்ரோஷமாகவும், எந்த செய்தியை மென்மையாகவும் சொல்லவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்து அதற்கு தகுந்தார்போல முகபாவனையோடு பேசிபார்க்கவேண்டும். குறிப்புகளை பார்க்காமல் சொல்ல முடிந்தால், முடிந்தது வேலை. மிக அருமையான ஒரு பயானுக்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள்.

 

y டெலிவரி – வெளிப்படுத்துதல்

ஒரு பயானை பல உபதலைப்புகளாக பிரித்திருக்கிறீர்கள் எனில், ஒவ்வொரு உபதலைப்பு முடிந்தபிறகும் இதுவரை சொல்லிய உபதலைப்புகளின் பெயரை மட்டும் ஓரிரு வரிகளில் நினைவுபடுத்துங்கள். அதாவது மேற்கண்ட உரையில் இரண்டு உபதலைப்பை முடித்தபிறகு, ”அப்ப முதல்ல பிரார்த்தனை ஒரு கட்டாயக்கடமை என்பதை பார்த்தோம். இரண்டாவதாக, பிராத்தனை செய்யும் முறையை பார்த்தோம். அடுத்தது பிரார்த்தனையில் செய்யக்கூடாத செயல்கள்…” என்று உரையை தனித்தனியாக பிரித்து காட்டவேண்டும். இனி. உரையை ஆரம்பிக்கும் போது கூறவேண்டியவற்றைக் காண்போம்.

Ì திர்மிதியில் இடம் பெறும் ஹதீஸ்.

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْثَرُ بْنُ الْقَاسِمِ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ التَّشَهُّدُ فِي الصَّلَاةِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَالتَّشَهُّدُ فِي الْحَاجَةِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا فَمَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ قَالَ عَبْثَرٌ فَفَسَّرَهُ لَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا قَالَ وَفِي الْبَاب عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ رَوَاهُ الْأَعْمَشُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَوَاهُ شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكِلَا الْحَدِيثَيْنِ صَحِيحٌ لِأَنَّ إِسْرَائِيلَ جَمَعَهُمَا فَقَالَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ وَأَبِي عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ قَالَ أَهْلُ الْعِلْمِ إِنَّ النِّكَاحَ جَائِزٌ بِغَيْرِ خُطْبَةٍ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَغَيْرِهِ مِنْ أَهْلِ الْعِلْمِ رواه الترمذي

இன்னல்ஹம்த லில்லாஹி நஸ்தயீனுஹு. வநஸ்தஃபிறுஹு. வநஊதுபில்லாஹி மின் ஷுறூரி அன்ஃபுஸினா வஸய்யிஆதி அஃமாலினா. ஃபமய் யஹ்திஹில்லாஹு ஃபலா முளில்ல லஹ். வமய் யுள்லில் ஃபலா ஹாதியலஹ். வஅஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ். வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.

இத்தக்குல்லாஹ ஹக்கத்துகாதிஹி. வலா தமூத்துன்ன இல்லா வஅன்தும் முஸ்லிமூன்.
வத்தகுல்லாஹல்லதீ தஷ்அலூன பிஹி வல்அர்ஹாம். இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா. இத்தக்குல்லாஹ வகூலூ கவ்லன் ஸதீதா.

”நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் போதும் (மக்களுக்குப் பிரச்சாரம் செய்யத்) தேவை ஏற்படும் போதும் தஷஹ்ஹுதை கற்றுத் தந்தார்கள். தொழுகையில் உள்ள தஷஹ்ஹுத் அத்தஹிய்யாத் ஆகும். (மக்களுக்குப் பிரச்சாரம் செய்யத்) தேவை ஏற்படும் போது சொல்லும் தஷஹ்ஹுத் கீழ்க்கண்ட தஷஹ்ஹுத் ஆகும்.

”நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம். அவனிடமே நாம் பாவமன்னிப்பு தேடுகிறோம். நம்முடைய உள்ளங்களின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்பாடுகளை விட்டும் அவனிடமே நாம் பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அல்லாஹ் வழிகெடுத்தவனுக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கிறேன்.

அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்காதீர்கள். எந்த இறைவனை முன்னிறுத்தி நீங்கள் கேட்கிறீர்களோ அந்த இறைவனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்”. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி), நூல்: (திர்மிதீ: 1023)
Ì  இதன் பிறகு பின்வரும் வாசகங்களை ஓதியுள்ளார்கள்.

إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

இன்ன அஸ்தகல் ஹதீஸி கிதாபுல்லாஹி. வஅஹ்ஸனல் ஹத்யி ஹத்யு முஹம்மத். வஷர்றுல் உமூரி முஹ்தஸாதுஹா. வகுல்லு முஹ்தஸதின் பித்அ. வகுல்லு பித்அத்தின் ளலாலா. வகுல்லு ளலாலதின் ஃபின்னார்.

நபியவர்கள் உரையை ஆரம்பிக்கும் போது, “”அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். வழிகாட்டரில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டல். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை. ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் தள்ளும்.” என்று கூறுவார்கள். நஸாயீ (1560)

குறிப்புகளும் உள்ளன. மனப்பாடமும் ஆகிவிட்டது, இனி பயிற்சி எடுத்தது போல, மக்களிடத்தில் செய்தியை வெளிப்படுத்துவது தான், எஞ்சியிருக்கும் ஒரே வேலை. மறந்துவிடவேண்டாம்! சரியான ஏற்ற இறக்கங்களுடன், தேவையான பாடிலாங்குவேஜுடன் உற்சாகமாக உரை நிகழ்த்துங்கள். உங்கள் உரையின் மூலம் பத்து பேராவது தொழ ஆரம்பிக்க வேண்டும், மாற்றம் ஏற்பட வேண்டும், அதற்கேற்ப பேசவேண்டும் என்ற இலட்சிய வெறியோடு கிளம்பிச் செல்லுங்கள்.

அல்லாஹ்வுடைய திருப்தி ஒன்றையே இறுதி நோக்கமாகக் கொண்டு, உங்களின் கருத்துக்களால் நன்மையை ஏவி, தீமையை தடுக்க புறப்படுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும்.