இந்தியாவில் ஆண்டுதோறும் கொல்லப்படும் 2,39,000 பெண் குழந்தைகள்
இந்தியாவில் ஆண்டுதோறும் கொல்லப்படும் 2,39,000 பெண் குழந்தைகள்
இந்தியாவில் பாலினம் பாகுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 39 ஆயிரம் பெண் குழந்தைகள் இறக்கின்றன. இந்த பெண் குழந்தைகளின் இறப்பு உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆகிய வடமாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. பிரசவத்திற்கு முன் இறந்த குழந்தைகள் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என டான்செட் மருத்துவ இதழ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று யார் அதை நல்ல முறையில் வளர்க்கிறார்களோ அவர்களும் நானும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது இரண்டு விரல்களையும் ஒட்டிக் காண்பித்தார்கள்.
நபிகள் நாயகத்தின் இந்த உபதேசத்தின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்த பெண் குழந்தைகள் உயிரோடு கொல்லப்படுவதில்லை. மாறாக அவர்கள் பெற்றோர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பெற்றுத் தருபவர்கள் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருப்பதால் அந்தப் பெண் குழந்தைகள் பாராட்டி, சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். அதனால் சிசுக் கொலை என்பது முஸ்லிம் சமூகத்தில் அறவே இல்லாமல் இருக்கிறது. ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் பொருளாதார கணக்கு போட்டு பெண் குழந்தைகளை கொலை செய்து விடுகின்றன.
பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினால் எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளால் பெற்றோருக்கு பயனில்லை என்று நினைக்கிறார்கள். பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, வேலை வாங்கி கொடுத்தால் அவளுடைய சம்பாத்தியம் கணவனுக்கும், கணவனின் குடும்பத்தாருக்கும் போய்ச் சேருமே தவிர படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்த பெற்றோருக்கு வராது என கணக்கு போடுகிறார்கள். பெண் பிள்ளைக்கு திருமணத்தின் போது வரதட்சணை கொடுக்க வேண்டும். இதற்காக காலம் முழுக்க உழைக்க வேண்டும்.
திருமணத்திற்கு பிறகும் கூட பெண் பிள்ளைகளுக்கு செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உலக கணக்கு போட்டு, பெண் பிள்ளையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து, கள்ளிப் பால் ஊற்றியோ, வாயில் நெல்மணியை போட்டோ அல்லது வேறு ஏதாவது வகையிலோ கொலை செய்து விடுகின்றனர். இஸ்லாத்தில் இந்த சிசுக் கொலை பெரும் பாவமாக கருதப்படுகிறது. இஸ்லாமல்லாத மதங்களில் இது பாவமாக கருதப்படுவதில்லை. அதனால் தான் பி.ஜே.பி. ஆளும் உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இது அதிகமாக நடக்கிறது.
இந்த சிசுக் கொலையை தடுத்து நிறுத்த வேண்டுமெனில் பெண் குழந்தைகள் பற்றிய நபிகள் நாயகத்தின் போதனையை எல்லோர் மனதிலும் பதிய வைக்க வேண்டும். இதை மோடி அரசு செய்யுமா? அந்த அரசு யோகா, பிராணாயாமம் சொல்ல வேண்டும். வந்தே மாதரம் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்துமே தவிர நபிகள் நாயகத்தின் போதனையை பெற்றோர் மனதில் பதிய வைத்து பெண் குழந்தைகள் கொள்ளப்படுவதை எப்படி தடுக்க முயலும்?
இரண்டு – இஸ்லாமிய மார்க்கத்தில் இருப்பது போல திருமணம் முடிக்கும் ஆண் தான் பெண்ணுக்கு திருமணக் கொடை கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தை இயற்றி விட்டால் முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களும் பெண் குழந்தைகளை போற்றி வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படிச் செய்து பெண் குழந்தைகள் கொல்லப் படுவதை தடுக்க முன்வர வேண்டும். ஆட்சியாளர்கள் இதைச் செய்ய முன் வருவார்களா? அதற்கான அறிகுறி தென்படவில்லை. எனவே பெண் குழந்தைகள் கொல்லப்படுவது ஆண்டுக்காண்டு இந்தியாவில் அதிகரிக்குமே தவிர நிற்கும் வாய்ப்பில்லை.
Source : unarvu (01/06/18)