8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான்
8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா கிராமத்தில் வசித்து வந்த முஸ்லிம்களை அச்சுறுத்தி ஊரை விட்டு காலி செய்வதற்காக ஆசிஃபா என்ற 8 வயது முஸ்லிம் சிறுமியைக் கடத்திச் சென்று, 3 நாட்கள் கோவிலில் அடைத்து வைத்து, அவளுக்கு போதை மருந்து கொடுத்து, மயக்கம் தெளியாத நிலையிலேயே மாறிமாறி கற்பழித்து கொலை செய்த வழக்கில் 19 வயதான முஸ்லிமல்லாத இளைஞர் முதல் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளான்.
இரண்டாவது குற்றவாளியாக அவனுடைய மாமா சஞ்சிராம் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வருவாய்த் துறை அதிகாரி என்பதோடு, முஸ்லிம் சிறுமி கற்பழிக்கப்பட்ட கோவிலின் நிர்வாகியுமாவார். 3-வது குற்றவாளியின் பெயர் தீபக் கஜுரி என்பதாகும். இவன் சிறப்பு போலீஸ் அதிகாரியாவான். 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுரிந்தர்குமாரும் ஒரு சிறப்பு காவல் அதிகாரியாவான். முதல் குற்றவாளியான 19வயது இளைஞனின் நண்பன் மகேஷ் குமார் என்பவன் 5-வது குற்றவாளியாவான். கோவில் நிர்வாகி சஞ்சிராமின் மகன் விஷால் என்பவன் 6-வது குற்றவாளியாவான். இந்த குற்றத்தை மூடி மறைக்க முயன்ற போலீசார் இருவர் 7 மற்றும் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த 8 குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்ற காவி அமைப்பு ஜம்முவில் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் காஷ்மீரில் வனத்துறை அமைச்சராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த சவுத்ரி லால் சிங் என்பவரும், தொழில் துறை அமைச்சராக இருந்த சுந்தர் பிரகாஷ் என்பவரும் மக்களின் எதிர்ப்பு காரணமாக தங்கள் பதவியை ராஜினாமாச் செய்து, அந்த ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் சத் சர்மாவிடம் அளித்துள்ளனர்.
கற்பழித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் சிறுமி ஆசிஃபாவின் பக்கம் நிற்காமல் கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி, அதில் கலந்து கொண்ட பா.ஜ.க.வையும் இரு பா.ஜ.க. அமைச்சர்களையும் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட உலகளாவிய பத்திரிகைகள் வறுவறு என வறுத்தெடுத்து பா.ஜ.க.வின் பாசிச முகத்தை உலகறியச் செய்துள்ளன. இதனால் உலக அரங்கில் மோடியின் முகம் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.
Source : unarvu ( 20/4/18 )