தும்மலை அடக்கினால் ஆபத்து
தும்மலை அடக்கினால் ஆபத்து
இஸ்லாத்தை மெய்ப்படுத்தும் ஆய்வு!
ஒரு மனிதன் ஒரு முறை தும்மினால் அது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதைக் குறிக்கும். ஆனால் இன்றைய நாகரீக சமூகம் பொது இடங்களில் சப்தமிட்டு தும்முவது அநாகரீகச் செயல் என்று கருதுகிறது. எனவே தான் பொது சபைகளில் ஒருவர் தும்மினால் “எக்ஸ்க்யூஸ் மி” – என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லுவது பொது சபைகளில் நடந்து கொள்ளும் ஒழுங்கு முறையாக சொல்லித் தரப்படுகிறது. மேலும் தும்மல் மூலம் தான் ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு நோய் தொற்றுகிறது எனவும் பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
எனவே தான் பொது இடங்களில் தும்முவது ஒரு கெட்ட காரியம் என்று கருதும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற நம்பிக்கையின் விளைவாக சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் லைசெஸ்டர் மாகாணத்தைச் சேர்ந்த 34 வயது நிரம்பிய ஒருவர் வீங்கிய கழுத்துடனும், கடும் வலியால் அவதிப்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரைப் பரிசோதித்த மருத்துவர் குழு இவரது பின் தொண்டை கிழிந்துள்ளது என்று கண்டறிந்தனர். பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து சொல்லும் போது, தமக்கு தும்மல் வந்த போது அதை அடக்க முற்பட்டு மூக்கையும் வாயையும் அடைத்ததால் தமது பின் தொண்டையின் சதை கிழிந்துள்ளது என்று சொன்னார்.
இதனால் அவர் ஒரு வார காலம் பேசக் கூட முடியாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் பல்கலைக் கழக மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் இயக்குநர் ஞிக்ஷீ: அந்தோனி அய்மட் விளக்கும் போது, ஒருவர் தும்மும் போது, மணிக்கு 150 மைல்கள் (சுமார் 240 கிலோ மீட்டர்) வேகத்தில் காற்று வெளியாகிறது என்று குறிப்பிட்டார். மேலும் அந்த நபருக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், கழுத்து முதல் விலா வரை வெடிக்கும் சப்தம் கேட்டது என்றும் தெரிவித்தனர். இதன் மூலம் வெளியேற வேண்டிய காற்று நெஞ்சுப் பகுதிவரை சென்றடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
மேலும் அவருக்குப் பிற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க அவருக்கு ஒரு வாரகாலம் நரம்பு வழியில் ஆண்ட்டி-பையடிக் கொடுத்து சிகிச்சை அளித்தனர். அமெரிக்கா டெக்ஸஸ் மாகாணம் ஹ¨ஸ்டானைச் சேர்ந்த டெக்ஸஸ் ஹெல்த் சைன்ஸ் செண்டரின் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் ஞிக்ஷீ: ஜியாங் ஜியாங் ஆண்டுக்கு 1 அல்லது 2 நபர்கள் அவர் வேலை செய்யும் மருத்துவமனையில் இதே தொந்தரவால் அவதிப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் சில தருணங்களில் தவிர்க்கப்படும் தும்மல் துப்பாக்கி குண்டு துளைப்பதினால் ஏற்படும் பாதிப்புக்கு நிகராக இருக்கும் என்றும் தெரிவித்தார். சில சந்தர்ப்பங்களில் இது நுரையீரலையே சீர்குலைக்கும் அளவுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்தார்.
அதே போல் தும்மல் என்பது ஒருவர் உடலில் இருந்து தீய பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் வெளியே தள்ளுவதற்காகத் தான். இதை நாம் தடுக்க முற்படும் போது அக்கிருமிகள் உடலின் வேறு பகுதிகளில் போய்த் தங்கும் நிலை ஏற்படும். கொட்டாவி வந்தால், இயன்ற அளவுக்கு தடுக்கச் சொன்ன இஸ்லாம் மார்க்கம், தும்மல் வந்தால் “அல்ஹம்து லில்லாஹ்” எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்ல வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் முன்னால் தலைவர் ரிச்சர்ட் கான்டி விவரிக்கையில், ஒருவர் தும்மும் போது அவரின் நெஞ்சு பகுதியில் இரத்த ஓட்டம் குறைவதால், அது இருதயத் துடிப்பை சற்று மாற்றுகிறது என்றார். எனவே தான் தும்மல் வந்தால் ஒருவரின் இருதயம் ஒரு நொடி நிற்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதயத் துடிப்பு சற்று மாறுகிறது என்கிற அறிவியல் காரணமும், தும்மலை தடுத்தால் ஏற்படும் பாதிப்பையும், தும்மும் போது மனித உடலில் கிருமிகள் வெளியாகிறது போன்ற காரணங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒருவர் தும்மினால், இறைவனைப் புகழ வேண்டும் என்று இஸ்லாம் மார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்!