சிந்திக்க தூண்டும் ஹதீஸ்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2
முன்னுரை

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு செய்திகளை காலத்திற்கேற்ப கூறியிருக்கிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட செய்திகளில் சிலவை நம்மை சிந்திக்க வைக்கின்றது. அவற்றை இந்த உரையில் காண்போம்.

ஒட்டகத்தின் பாலிலும், சிறுநீரிலும் நோய் நிவாரணம்
قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوْا المَدِينَةَ «فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا» فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا، قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ، «فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسُمِرَتْ أَعْيُنُهُمْ، وَأُلْقُوا فِي الحَرَّةِ، يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ». قَالَ أَبُو قِلاَبَةَ: «فَهَؤُلاَءِ سَرَقُوا وَقَتَلُوا، وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ»

‘உகல்’ அல்லது ‘உரைனா’ கோத்திரத்திலிருந்து சிலர் மதீனாவிற்கு வந்திருந்தனர். மதீனா(வின் கால நிலை) அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறு நீரையும் அருந்துமாறு அவர்களுக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் அதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததும் நபி (ஸல்) அவர்களின் கால் நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டுக் கால்நடைகளைத் தங்களோடு ஓட்டிச் சென்றனர்.

இச்செய்தி மறு நாள் காலை நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் அவர்களைப் பின்தொடர்ந்து (பிடித்து வர) சிலரை அனுப்பினார்கள். அன்று நண்பகலில் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களின் கைகளும் கால்களும் வெட்டப்பட்டு, அவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. ‘ஹர்ரா’ என்ற (கரும்பாறை நிறைந்த) இடத்தில் அவர்கள் எறியப்பட்டார்கள். அவர்கள் தண்ணீர் கேட்டும் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படவில்லை’.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 233) 

நெகிழ்வூட்டும் அறவுரைகள்
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالفَرَاغُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1. ஆரோக்கியம்.

2. ஓய்வு

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6412) 

மனிதன் இந்த இரண்டு விஷயங்களில் அலட்சியம் செய்து தன்னை மிகுந்த இழப்பீட்டுக்கு உள்ளாக்குகின்றான். அவ்வாறு செய்வதால் தனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வு அறிக்கை சொல்கிறது. இப்பேற்பட்ட செய்தியை 1400 வருடங்களுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் தங்களது உம்மத்தார்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பல் துலக்குதல் பற்றிய அறிவுரைகள்

நான் உங்களுக்கு அதிகமாக அறிவுறுத்துகிற விஷயம் என்னவெனில் பல் துலக்குதல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.’

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 887) 

أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 888) 

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ

நபி (ஸல்) அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்குவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 889)

நடைபாதைகளிலும் நிழல்(உள்ள இடங்)களிலும் மலம் கழிப்பதற்கு வந்துள்ள தடை
«اتَّقُوا اللَّعَّانَيْنِ» قَالُوا: وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ، أَوْ فِي ظِلِّهِمْ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 448) 

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை
مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 5678) 

தாடி வளர்ப்பதால் ஏற்படும் பயன்
خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : (புகாரி: 5892) 

முஃமினான ஆண்கள் தங்கள் தாடிகளை வளர்த்து இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மிகவும் வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள். தாடி வளர்ப்பதனால் பெறக்கூடிய நன்மைகள் ஏராளம் என இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.

உறங்கியெழுந்ததும் மூக்கை கழுவுதல்
إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَلْيَسْتَنْثِرْ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيَاشِيمِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில், இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 403)

நடைபாதைகளிலும் நிழல்(உள்ள இடங்)களிலும் மலம் கழிப்பதற்கு வந்துள்ள தடை
«اتَّقُوا اللَّعَّانَيْنِ» قَالُوا: وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ، أَوْ فِي ظِلِّهِمْ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 448) 

நாய்களை கொள்ளுமாறு வந்த உத்தரவு
أَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ، ثُمَّ قَالَ: «مَا بَالُهُمْ وَبَالُ الْكِلَابِ؟» ثُمَّ رَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَكَلْبِ الْغَنَمِ، وَقَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، وَعَفِّرُوهُ الثَّامِنَةَ فِي التُّرَابِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும், நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள் நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும், கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 473) 

ஒரு மனிதன் இவ்வுலகில் சுயமரியாதையோடும், சுகாதாரத்தோடும், மக்களுக்கு என்றென்றும் நன்மை தரக்கூடிய ஏராளமான செய்திகளை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நல்லுபதேசங்களாக நமக்கு அறிவுரை கூறியுள்ளார். அதனை நம் வாழ்வில் தவறாது கடைபிடிக்க வேண்டும்.

இதுப்போன்ற இன்னும் ஏராளமான நபிகளாரின் பொன்மொழிகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. அவை யாவும் இன்றளவும் நமக்கு நன்மை பயக்கவும் செய்கின்றன. அது போன்ற நன்மைகளை செய்யும் நன்மக்களாக நாம் மாற வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.