108. ஹெட்ஃபோன், வாக்மேனில் குர்ஆனை கேட்கலாமா?
ஹெட்ஃபோன், வாக்மேனில் குர்ஆனை கேட்கலாமா?
கேட்கலாம்
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ‘அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என என்னிடம் கூறினார்கள்.(புகாரி: 5048)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்!’ என்று கூறினார்கள். நான் ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?’ என்று கேட்டேன். அவர்கள் ‘பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்’ என்று கூறினார்கள்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் குர்ஆனை ஓதச் சொல்லி நபி(ஸல்) அதனை கேட்டுள்ளார்கள். எனவே, குர்ஆன் கிராத்தை, ஹெட்ஃபோன், வாக்மேனில் கேட்கலாம். தவறில்லை.