091. தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா?

அவசியம் என்றால் பேசலாம்

தவாஃப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாஃபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராக என்றும் கூறினார்கள்.

(புகாரி: 1620, 6703)