குர்பானியின் சட்டம் தான் அகீகா பிராணிக்குமா?

கேள்வி-பதில்: குழந்தை வளர்ப்பு

குர்பானியின் சட்டம் தான் அகீகா பிராணிக்குமா?

இல்லை.

குர்பானிக்காக வெட்டப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றிற்கு நபி(ஸல்) அவர்கள் பல தகுதிகளையும், சட்டங்களையும் கூறியுள்ளார்கள். 

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி), நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி), நூற்கள் : முஸ்லிம் (3637)

இதுவும், இன்னும் சில சட்டங்களும் குர்பானி பிராணி சம்பந்தமாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனினும், இவை அகீகா பிராணிக்கும் உரியவை என்பதற்கு எந்த சான்றும் இல்லை. இறைவனுக்கு செய்யப்படும் வணக்கம் என்பதால், இயன்ற அளவு சிறந்த பிராணியை தேர்வு செய்வது நல்லது.

By Farook