037. இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை நோக்கி கட்டவேண்டுமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் கட்டவேண்டுமா? அல்லது இஹ்ராம் கட்டும் எல்லைக்கு வந்து, நிய்யத் சொல்லும் போது தான் கிப்லாவை முன்னோக்கி இருக்கவேண்டுமா?

ஆடைக்கு இல்லை.
மீக்காத்தில் தல்பியாவின் போது கிப்லாவை நோக்க வேண்டும்.

இஹ்ராம் ஆடை அணியும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று ஹதீஸில் வரவில்லை. ஆனால் மீக்காத் எனப்படும் எல்லைக்கு வந்து தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள்.

(நூல்: பைஹகீ சுனனுல் குப்ரா 9258)