032. ஹரமில் தொழுவதன் சிறப்பு என்ன?
இலட்சம் மடங்கு சிறந்தது.
”(மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்ளியில் (மஸ்ஜிதுன்நபவியில்) தொழுவது 1000 மடங்காகும். பைதுல் மக்திஸில் தொழுவது 500 மடங்கு சிறந்தது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்( ரலி) நூல்: ஸகீர் பைஹகீ)
مسند البزار = البحر الزخار (10/ 77)
4142- حَدَّثنا إبراهيم بن حُمَيد، قَال: حَدَّثنا مُحَمد بن يزيد بن شداد، قَال: حَدَّثنا سَعِيد بن سالم القداح، قَال: حَدَّثنا سَعِيد بْنُ بَشِيرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيد اللَّهِ، عَن أُمِّ الدَّرْدَاءِ، عَن أَبِي الدَّرْدَاءِ، رَضِي اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: فَضْلُ الصَّلاةِ فِي المسجد الحرام على غيره مِئَة أَلْفِ صَلاةٍ وَفِي مَسْجِدِي أَلْفُ صَلاةٍ وَفِي مسجد بيت المقدس خمسمِئَة صَلاةٍ.
السنن الصغير للبيهقي {ط العلمية} (1/ 456)
1821- وَرُوِّينَا فِي حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ وَجَابِرٍ مَرْفُوعًا : فَضْلُ الصَّلاَةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ عَلَى غَيْرِهِ مِئَةُ أَلْفِ صَلاَةٍ ، وَفِي مَسْجِدِي هَذَا أَلْفُ صَلاَةٍ وَفِي مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِئَةِ صَلاَةٍ.
மதீனாவின் மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.
صحيح البخاري (2/ 60)
1190 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 1190) .