28) சூனியத்தை நல்லறிஞர்கள் மறுக்கவில்லையா?
முஃதஸிலா என்ற பெயரில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.
இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள்.
இப்போது சூனியத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் சூனியத்தை மறுக்கும் நம்மைப் பார்த்து ”இவர்கள் சொல்வது முஃதஸிலாக் கொள்கை. முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை நம்ப மறுக்கின்றனர். முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுத்ததில்லை” என்று குற்றம் சாட்டுகின்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் புதிதாக மக்களிடம் இந்தக் கொள்கையைத் திணித்து மக்களைக் குழப்புகின்றனர் என்றும் சூனியக் கட்சியினர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கொள்கை தவறு என்று இவர்கள் கருதினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதம் சரியல்ல என்று ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் இவர்கள் பிரச்சாரம் செய்வதில் நமக்கு மறுப்பு இல்லை. அந்தப் பிரச்சாரம் எடுபடாமல் தமது கூடாரம் காலியாகிறது என்று அவர்கள் அஞ்சினால் விவாதத்தின் மூலம் இதற்கு ஒரு முடிவு காண அவர்கள் முயல வேண்டும்.
ஆனால் தங்களுடன் இருப்பவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் முஃதஸிலா கொள்கை உடையவர்கள் என்று கூறி மக்களின் சிந்தனைக்கு திரை போட நினைக்கிறனர்.
முஃதஸிலா என்ற வழிகெட்ட பிரிவினர் சூனியத்தை மறுத்தார்கள் என்பது உண்மை. ஆனால் சூனியத்தை மறுத்ததால் தான் இவர்கள் வழிகெட்டவர்களாகக் கருதப்பட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நபிமார்களின் அற்புதங்களை மறுத்தது உள்ளிட்ட பல கெட்ட கொள்கைகள் காரணமாகவே அவர்கள் வழிகெட்டவர்களாகக் கருதப்பட்டனர்.
முஃதஸிலாக்களைக் கடுமையாக எதிர்த்த அறிஞர்கள் பலரும் சூனியத்தை மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் முஃதஸிலாக்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆம்! சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று முஃதஸிலாக்கள் மட்டும் சொல்லவில்லை. முஃதஸிலாக்களை எதிர்த்த நல்லறிஞர்களும் சூனியம் என்பது வெறும் கற்பனையே என்று சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மையை மக்களிடம் இவர்கள் மறைக்கின்றனர்.
புஹாரி நூலுக்கு ஏராளமான விரிவுரை நூல்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை இரண்டு நூல்கள் தான். ஒன்று இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய பத்ஹுல்பாரி. மற்றொன்று ஐனி அவர்கள் எழுதிய உம்ததுல் காரி. பத்ஹுல் பாரியை ஷாபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். உம்ததுல் காரி நூலை ஹனபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். புகாரியில் உள்ள ஹதீசுக்கு மாற்றமாக ஹனபி மத்ஹப் சட்டம் இருந்தால் ஐனி எப்படி சமாளிக்கிறார் என்று அறிந்து கொள்ள உம்ததுல் காரியைத்தான் ஹனபிகள் புரட்டுவார்கள்.
இந்த இரண்டு நூல்களிலும் சொல்லப்படுவதைப் பாருங்கள்.
இப்னு ஹஜர் தமது ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் சொல்வதைப் பாருங்கள்!
فتح الباري – ابن حجر – (10 / 222)
واختلف في السحر فقيل هو تخبيل فقط ولا حقيقة له وهذا اختيار أبي جعفر الاسترباذي من الشافعية وأبي بكر الرازي من الحنفية وبن حزم الظاهري وطائفة قالالنووي والصحيح أن له حقيقة وبه قطع الجمهور وعليه عامة العلماء ويدل عليه الكتاب والسنة الصحيحة المشهورة انتهى
சிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வெறும் கற்பனை தான்; அது உண்மையில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாபி மத்ஹபில் மரியாதைக்குரிய அறிஞராக இருந்த அபு ஜஃபர் என்பவரின் கருத்து இதுதான். ஹனபி மத்ஹபின் அறிஞரான அபுபக்கர் ராசீ அவர்களின் கருத்தும் இதுதான். இப்னு ஹஸ்ம் அவர்களின் கருத்தும் இதுதான். (குர்ஆன் ஹதீஸ்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வியாக்கியானங்களும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வழிகெட்ட கொள்கைக்கு சிம்ம சொப்பனமாகக் கருதப்பட்டவர் இப்னு ஹஸ்ம் அவர்கள்.) இன்னும் ஒரு தொகையினரின் கருத்தும் இதுதான். சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தான் பெரும்பாலோர் உள்ளனர். இதைத்தான் குர்ஆன் ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன என்று நவவி கூறுகிறார்.
ஆதாரம் : பத்ஹுல் பாரி
நான்கு மத்ஹபுக்காரர்களும் முஃதஸிலாக் கொள்கையை எதிர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஷாபி, ஹனபி மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களும் முஃதஸிலாக்களை எதிர்த்த இப்னு ஹஸ்ம் அவர்களும் சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று சொல்லியுள்ளதாக இப்னு ஹஜர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு சொன்னதற்காக மேற்கண்ட அறிஞர்களை முஃதஸிலாக்கள் என்று இப்னு ஹஜர் சொல்லவில்லை. ஒன்று அதிகமானவர்களின் கருத்து; இன்னொன்று குறைவானவர்களின் கருத்து எனக் கூறுகிறாரே தவிர அவர்களை முஃதஸிலாக்கள் என்று சொல்லவில்லை.
அது போல் ஹனபி மத்ஹபின் முக்கிய அறிஞரான ஐனி அவர்கள் உம்ததுல் காரி நூலில் கூறுவதைப் பாருங்கள்.
عمدة القاري شرح صحيح البخاري (14/ 62)
الأول: إِن السحر لَهُ حَقِيقَة، وَذكر الْوَزير أَبُو المظفر يحيى بن مُحَمَّد بن هُبَيْرَة فِي كِتَابه (الْأَشْرَاف على مَذَاهِب الْأَشْرَاف) : أَجمعُوا على أَن السحر لَهُ حَقِيقَة إلاَّ أَبَاحنيفَة. فَإِنَّهُ قَالَ: لَا حَقِيقَة لَهُ. وَقَالَ الْقُرْطُبِيّ: وَعِنْدنَا أَن السحر حق، وَله حَقِيقَة يخلق الله تَعَالَى عِنْده مَا شَاءَ، خلافًا للمعتزلة وَأبي إِسْحَاق الإسفرايني من الشَّافِعِيَّة،حَيْثُ قَالُوا: إِنَّه تمويه وتخيل
சூனியம் பற்றி முதல் கருத்து அது உண்மைதான் என்பதாகும். சூனியம் உண்மையான ஒன்று என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார். சூனியம் மெய்யானது; அல்லாஹ் நாடும்போது நாடியதைப் படைப்பான் என்பது தான் நம்முடைய கருத்து. முஃதசிலாக்களும், ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூ இஸ்ஹாக் இஸ்பிராயீனி அவர்களும் இதற்கு மாற்றமான கருத்தில் உள்ளனர். சூனியம் என்பது பொய்த்தோற்றமும் முலாம் பூசுதலும் தான் என்று இவர்கள் கூறுகின்றனர் என குர்துபீ கூறுகிறார்.
ஆதாரம்: உம்ததுல்காரி
அபூ ஹனீபா இமாமும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூஇஸ்ஹாக் அவர்களும் முஃதஸிலாக்களா?
இதே கருத்தை இப்னு கசீர் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்.
تفسير ابن كثير ت سلامة (1/ 371)
[فَصْلٌ] (10) وَقَدْ ذَكَرَ الْوَزِيرُ أَبُو الْمُظَفَّرِ يَحْيَى بْنُ هَبيرة بْنِ مُحَمَّدِ بْنِ هُبَيْرَةَ فِي كِتَابِهِ: “الْإِشْرَافُ عَلَى مَذَاهِبِ الْأَشْرَافِ” بَابًا فِي السِّحْرِ، فَقَالَ: أَجْمَعُوا عَلَى أَنَّالسِّحْرَ لَهُ حَقِيقَةٌ إِلَّا أَبَا حَنِيفَةَ، فَإِنَّهُ قَالَ: لَا حَقِيقَةَ لَهُ عِنْدَهُ
சூனியம் முற்றிலும் உண்மை என்பது முதல் கருத்தாகும். சூனியம் உண்மை என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார்.
இப்னு ஹஜர் போன்று இதே காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் இப்னு தைமிய்யா அவர்கள்.
இப்னு தைமிய்யா அவர்கள் அல் ஃபுர்கானு பைன அவ்லியாயிஷ் ஷைத்தான் வ அவ்லியாயிர் ரஹ்மான் என்ற நூலில் எடுத்துக் காட்டுவதைப் பாருங்கள்.
الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان – (1 / 15)
9 – اخْتَلَفَ الْعُلَمَاءُ فِي أَنَّ السِّحْرَ هَل لَهُ حَقِيقَةٌ وَوُجُودٌ وَتَأْثِيرٌ حَقِيقِيٌّ فِي قَلْبِ الأَْعْيَانِ ، أَمْ هُوَ مُجَرَّدُ تَخْيِيلٍ ؟.فَذَهَبَ الْمُعْتَزِلَةُ وَأَبُو بَكْرٍ الرَّازِيُّ الْحَنَفِيُّ الْمَعْرُوفُبِالْجَصَّاصِ ، وَأَبُو جَعْفَرٍ الإِْسْتِرَابَاذِيُّ وَالْبَغَوِيُّ مِنَ الشَّافِعِيَّةِ ، إِلَى إِنْكَارِ جَمِيعِ أَنْوَاعِ السِّحْرِ وَأَنَّهُ فِي الْحَقِيقَةِ تَخْيِيلٌ مِنَ السَّاحِرِ عَلَى مَنْ يَرَاهُ ، وَإِيهَامٌ لَهُ بِمَا هُوَخِلاَفُ الْوَاقِعِ ، وَأَنَّ السِّحْرَ لاَ يَضُرُّ إِلاَّ أَنْ يَسْتَعْمِل السَّاحِرُ سُمًّا أَوْ دُخَانًا يَصِل إِلَى بَدَنِ الْمَسْحُورِ فَيُؤْذِيهِ ، وَنُقِل مِثْل هَذَا عَنِ الْحَنَفِيَّةِ ، وَأَنَّ السَّاحِرَ لاَ يَسْتَطِيعُبِسِحْرِهِ قَلْبَ حَقَائِقِ الأَْشْيَاءِ ، فَلاَ يُمْكِنُهُ قَلْبُ الْعَصَا حَيَّةً ، وَلاَ قَلْبُ الإِْنْسَانِ حِمَارًا .
சூனியம் என்பது உண்மையா என்பதிலும் அப்படி ஒன்று உண்டா என்பதிலும், ஒரு பொருளை வேறு பொருளாக சூனியத்தின் மூலம் மாற்ற முடியுமா என்பதிலும் அது முற்றிலும் கற்பனையா என்பதிலும் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முஃதஸிலா பிரிவினரும், ஜஸ்ஸாஸ் என்று அறியப்படும் ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அபூ பக்ர் ராஸீ அவர்களும், ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர் பகவீ, அபூ ஜஃபர் இஸ்திர்பாதி ஆகியோரும் சூனியத்தின் அனைத்து வகைகளையும் மறுத்துள்ளனர். சூனியம் என்பது இல்லாததை இருப்பது போல் காட்டுவதும், பொய்த்தோற்றமும் ஆகும். சூனியம் வைக்கப்பட்டவனுக்குள் விஷம் அல்லது புகை போன்றவற்றைச் செலுத்தினாலே தவிர சூனியத்தால் ஒன்று செய்ய முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹனபி மத்ஹபினரின் கருத்து இதுதான் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சூனியக்காரன் ஒரு பொருளின் தன்மையை மாற்ற முடியாது. கைத்தடியைப் பாம்பாக மாற்ற முடியாது. மனிதனைக் கழுதையாக ஆக்க முடியாது என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.
என்று இப்னு தைமியா அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.
இப்படிச் சொன்ன அறிஞர்களை இப்னு தைமியா அவர்கள் முஃதஸிலாக்கள் என்று சொல்லவில்லை. அவர்களும் அறிஞர்கள் தான் என்று இப்னு தைமியா சொல்கிறார். இப்னு தைமியா அவர்கள் குறிப்பிடுகின்ற பகவி அவர்கள் ஹதீஸ்களை நிலைநாட்டப் பாடுபட்டவர் என்பதால் முஹ்யிஸ் ஸுன்னா (நபிவழியை உயிர்ப்பித்தவர்) என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர். சூனியம் சம்மந்தமான செய்திகளை அவர் மறுத்ததால் முஹ்யிஸ் ஸுன்னா என்ற அடைமொழியை நீக்கி முஃதஸிலா பட்டத்தை யாரும் இவருக்குக் கொடுக்கவில்லை.
போலி மார்க்க அறிஞர்களுக்கு சூனியம் என்பது சம்பாதிக்க உதவுவதாலும், சூனியம் வைத்து விடுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்த இது உதவுவதாலும் சூனியத்துக்கு தாக்கம் உண்டு என்ற கருத்து அதிக அளவில் சென்றடைந்து விட்டது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹனபி மத்ஹபினரே இருந்தும் அவர்கள் சூனியத்தை நம்புகிறார்கள். அபூஹனீபா இமாம் சூனியம் என்பது கற்பனை என்று கூறி இருந்தும் இப்படி நம்புகிறார்கள் என்றால் போலி ஆலிம்கள் சூனியத்திற்கு ஆற்றல் உள்ளது என்று பிரச்சாரம் செய்ததே காரணம்.
சூனியத்தினால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்பவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இதனால் இந்தக் கருத்து குறைவாகவே மக்களிடம் சென்றடைந்துள்ளது.
முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுக்கவில்லை. இப்போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் தான் மறுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்று சொல்பவர்களின் வாதங்கள் அனைத்தும் மேலே சொன்ன ஆதாரங்களால் பொய் என நிரூபிக்கப்பட்டு விட்டது.
ஷாபி, ஹனபி மதஹபினர் நட்த்தும் அனைத்து அரபி மதரஸாக்களிலும் பட்டம் பெறும் ஏழாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடநூலாக பைழாவி என்ற தஃப்சீர் சொல்லித் தரப்படுகிறது.
இந்த தஃப்சீரில் ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்தாலும், இவர்கள் பாடம் நடத்தும் இந்த தஃப்சீரில் சூனியத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கின்றது என்று பார்க்கலாம்.
تفسير البيضاوي = أنوار التنزيل وأسرار التأويل (4/ 138)
فَأُلْقِيَ السَّحَرَةُ ساجِدِينَ لعلمهم بأن مثله لا يتأتى بالسحر، وفيه دليل على أن منتهى السحر تمويه وتزويق يخيل شيئاً لا حقيقة له
மூஸா நபி அற்புதம் செய்து காட்டியவுடன் சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர் என்று 26:46 வசனம் கூறுகிறது. மூஸா நபி செய்தது போல் சூனியத்தின் மூலம் செய்ய முடியாது என்று அவர்கள் அறிந்ததால் ஸஜ்தாவில் விழுந்தனர். சூனியம் என்பது போலித்தோற்றம் முலாம் பூசுதல், அதில் அறவே உண்மை இல்லை என்பதற்கு இவ்வசனம் ஆதாரமாக உள்ளது.
இப்படி விரிவுரை எழுதிய பைளாவி முஃதஸிலா கொள்கை உடையவரா? முஃதஸிலா கொள்கை உடையவரின் நூலைத்தான் பட்டப்படிப்புக்கு பாட நூலாக வைத்துள்ளார்களா?
تفسير البيضاوي = أنوار التنزيل وأسرار التأويل (3/ 121)
فَلَمَّا أَلْقَوْا قالَ مُوسى مَا جِئْتُمْ بِهِ السِّحْرُ أي الذي جئتم به هو السحر لا ما سماه فرعون وقومه سحراً. وقرأ أبو عمرو السِّحْرُ على أن مَا استفهامية مرفوعة بالابتداءوجئتم به خبرها والسِّحْرُ بدل منه أو خبر مبتدأ محذوف تقديره أهو السحر، أو مبتدأ خبره محذوف أي السحر هو. ويجوز أن ينتصب ما بفعل يفسره ما بعدهوتقديره أي شيء أتيتم. إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ سيمحقه أو سيظهر بطلانه. إِنَّ اللَّهَ لاَ يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ لا يثبته ولا يقويه وفيه دليل على أن السحر إفساد وتمويه لا حقيقةله.
சூனியக்காரர்கள் சூனியம் செய்ததைப் பார்த்த மூஸா நபியவர்கள், நீங்கள் செய்தது சூனியம். அல்லாஹ் அதைத் தோற்கடிப்பான். வீனர்களின் செயலுக்கு அல்லாஹ் வெற்றியளிக்க மாட்டான் என்று கூறியதாக 10:81 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான். சூனியம் என்பது குழப்பம் ஏற்படுத்துதலும், இல்லாததை இருப்பதாகக் காட்டுதலும் தான் என்பதற்கும் அதில் அறவே உண்மை இல்லை என்பதற்கும் இவ்வசனம் ஆதாரமாக உள்ளது.
என்று தப்சீர் பைளாவியில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இவரை ஏன் முஃதஸிலா என்று ஒருவரும் சொல்லவில்லை?
மவ்லவி பட்டப்படிப்பில் ஏழாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு குர்ஆன் விரிவுரை நூலாக இதைத்தானே ஆலிம்கள் படித்தார்கள்? பைளாவியில் ஆதாரம் இல்லாமல் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொண்ட மார்க்க அறிஞர்கள் பைளாவி தக்க ஆதாரத்துடன் சொன்ன உண்மையை மட்டும் மறுப்பது ஏன்?
அது போல் ஷவ்கானி அவர்கள் தமது ஃபத்ஹுல் கதீர் என்ற நூலில் கூறுவதைப் பாருங்கள்
فتح القدير للشوكاني (2/ 265)
وما فِي مَا يَأْفِكُونَ مَصْدَرِيَّةٌ أَوْ مَوْصُولَةٌ، أَيْ: إِفْكِهِمْ أَوْ مَا يَأْفِكُونَهُ، سَمَّاهُ إِفْكًا، لِأَنَّهُ لَا حَقِيقَةَ لَهُ فِي الْوَاقِعِ بَلْ هُوَ كَذِبٌ وَزُورٌ وَتَمْوِيهٌ وَشَعْوَذَةٌ فَوَقَعَ الْحَقُّ أَيْ: ظَهَرَوَتَبَيَّنَ لِمَا جَاءَ بِهِ مُوسَى وَبَطَلَ مَا كانُوا يَعْمَلُونَ مِنْ سِحْرِهِمْ، أَيْ: تَبَيَّنَ بُطْلَانُهُ فَغُلِبُوا
7:117 வசனத்தில் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது யஃபிகூன் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். இச்சொல்லுக்கு பொய்யான புனைதல் என்று பொருள். அல்லாஹ் ஏன் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளான் என்றால் சூனியக்காரர்கள் செய்த சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்பதால் தான். மாறாக அது பொய்யும், புளுகும், புனை சுருட்டும், முலாம் பூசுவதுமாகும். இதனால் தான் சூனியக்காரர்கள் தோற்றனர்.
என்று ஷவ்கானி கூறுகிறார்.
இதே யஃபிகூன் என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு தப்ரீ அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
تفسير الطبري = جامع البيان ت شاكر (19/ 348)
(فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ) يقول: فإذا عصا موسى تزدرد ما يأتون به من الفرية والسحر الذي لا حقيقة له، وإنما هو مخاييل (1) وخدعة. (فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ) يقول: فلما تبين السحرة أن الذي جاءهم به موسى حق لا سحر، وأنه مما لا يقدر عليه غير الله الذي فطر السموات والأرض من غير أصل، خرّوا لوجوههم سجدالله، مذعنين له بالطاعة، مقرّين لموسى بالذي أتاهم به من عند الله أنه هو الحقّ، وأن ما كانوا يعملونه من السحر باطل
அவர்கள் பொய்யாகப் புனைந்ததை மூஸா நபி செய்த அற்புதம் விழுங்கியது என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் அவர்கள் செய்தது அறவே உண்மை இல்லாத சூனியமும் கற்பனையுமாகும் என்பதால் தான் இவ்வாறு கூறுகிறான். அதனால் தான் சூனியக்காரர்கள் சஜ்தாவில் விழுந்தனர்.
அது போல் இப்னு ஹய்யான் எழுதிய தப்சீர் அல்முஹீத் நூலில் எழுதப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
البحر المحيط في التفسير (5/ 133)
فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجاؤُ بِسِحْرٍ عَظِيمٍ أَيْ أَرَوُا الْعُيُونَ بِالْحِيَلِ وَالتَّخَيُّلَاتِ مَا لَا حَقِيقَةَ لَهُ كَمَا قَالَ تَعَالَى يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّها تَسْعى «3
20:66 வசனத்தில் மக்களின் கண்களை வசப்படுத்தினார்கள் என்பதன் விளக்கம் என்னவென்றால் அவர்கள் தந்திரங்கள் மூலமாகவும், பொய்த்தோற்றம் ஏற்படுத்தியும் இல்லாததை இருப்பது போல் காட்டினார்கள் என்பது தான். இதனால் தான் மூஸாவுக்கு கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார்கள்
அது போல் ரூஹுல் பயான் நூலில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்.
روح البيان (4/ 70)
نَّ اللَّهَ لا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ اى لا يثبته ولا يكمله ولا يديمه بل يمحقه ويهلكه ويسلط عليه الدمار قال القاضي وفيه دليل على ان السحر إفساد وتمويه لا حقيقة لهانتهى
10:81 வசனத்தில் வீனர்களின் செயலைச் சீராக்க மாட்டான் என்று அல்லாஹ் சொல்வது சூனியத்தில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதற்கும் அது பொய், பித்தலாட்டம் என்பதற்கும் ஆதாரமாகும் என்று காளீ அவர்கள் கூறியுள்ளார்.
அதே ரூஹுல் பயான் நூலில் ஷஃரானி கூறியதை எடுத்துக் காட்டுகிறார்.
روح البيان (6/ 274)
وفيه دليل على ان التبحر فى كل فن نافع فان السحرة ما تيقنوا بان ما فعل موسى معجزهم الا بمهارتهم فى فن السحر وعلى ان منتهى السحر تمويه وتزويروتخييل شىء لا حقيقة له وجه الدلالة ان حقيقة الشيء لو انقلبت الى حقيقة شىء آخر بالسحر لما عدوا انقلاب العصا حية من قبيل المعجزة الخارجة عن حد السحرولما خروا ساجدين عند مشاهدته
சூனியக்காரர்கள் சஜ்தாவில் விழுந்தனர் என்பது சூனியம் என்பதில் அறவே உண்மை இல்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இது எப்படி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஒரு பொருளை வேறு பொருளாக மெய்யாகவே மாற்றி அவர்கள் சூனியம் செய்திருந்தால் மூஸா நபி கைத்தடியைப் பாம்பாக மாற்றியதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்க மாட்டார்கள். இது சூனியத்தால் செய்ய முடியாத நிஜமான மாற்றம் என்று கருதியதால் தான் அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் மூஸா நபி காலத்து சூனியக்காரர்கள் விஷயமாக வரும் வசனங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் நுணுக்கமாகக் கவனித்து சூனியத்தில் அறவே உண்மை இல்லை என்று சொன்னவர்களில் பலர் 2:102 வசனத்துக்கு விளக்கம் சொல்லும் போது தாங்கள் சொன்னதையும் சூனியக்காரர்கள் தொடர்பான எல்லா வசனங்களையும் மறந்து விட்டு மாற்றிப் பேசுகின்றனர் என்பது தான்.
الشرح الكبير لابن قدامة (10/ 112)
وجملة ذلك ان السحر عقد ورقى وكلام يتكلم به ويكتبه أو يعمل شيئا يؤثر في بدن المسحور أو قلبه أو عقله من غير مباشرة له وله حقيقة فمنه ما يقتل وما يمرضوما يأخذ الرجل عن امرأته فيمنعه وطأها ومنه ما يفرق به بين المرء وزوجه وما يبغض أحدهما إلى الآخر أو يجب بين اثنين وهذا قول الشافعي وذهب بعضاصحابه إلى أنه لا حقيقة له انما هو تخييل قال الله تعالى (يخيل إليه من سحرهم أنها تسعى) وقال أصحاب أبي حنيفة ان كان شيئا يصل إلى بدن المسحور كدخانونحوه جاز ان يحصل منه ذلك فاما ان يحصل المرض والموت من غير ان يصل انى بدنه شئ فلا يجوز ذلك لانه لو جاز لبطلت معجزات الانبياء عليهم السلاملان ذلك يخرق العادات فإذا جاز من غير الانبياء بطلت معجزاتهم وأدلتهم
சூனியம் என்பது முடிச்சுப் போடுதல், சில சொற்கள், சில எழுத்துக்கள், அல்லது ஏதாவது செய்தல் எனப் பல வகைகள் உள்ளன. சூனியம் செய்யப்பட்டவனைத் தொடாமலே அவனது உடலிலோ, அறிவிலோ, உள்ளத்திலோ பாதிப்பை ஏற்படுத்த முடியும். அது மெய்யானது. சூனியத்தின் மூலம் ஒருவனைக் கொல்லலாம். நோயாளியாக ஆக்கலாம். கணவன் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல் ஆக்கலாம். கணவன் மனைவியரைப் பிரிக்கலாம். தம்பதியர் ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்யலாம். ஒருவரை ஒருவர் விரும்பச் செய்யலாம். இதுதான் ஷாபி இமாமின் கருத்தாகும். ஆனால் ஷாபி மத்ஹபின் சில அறிஞர்கள் சூனியம் அறவே உண்மை இல்லை; வெறும் கற்பனை என்று கூறியுள்ளனர். சீறுவது போல் பொய்த்தோற்றம் ஏற்பட்டது அல்லாஹ் கூறுவது தான் இதற்கு ஆதாரம். புகை போன்றவைகளை ஒருவனின் உடலில் செலுத்தினால் அது தீங்கிழைக்கலாம். எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் நோய் ஏற்படுத்துவது, மரணத்தை ஏற்படுத்துவது என்றால் அது அறவே சாத்தியம் இல்லை. அப்படி நடந்தால் நபிமார்களின் அற்புதங்கள் தோல்வியாகி விடும். நபிமார்கள் அல்லாதவர்களும் நடைமுறை சாத்தியமற்றதைச் செய்தால் நபிமார்களின் அற்புதம் வீணாகி விடும் என அபூ ஹனீபாவின் மாணவர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம் : இப்னு குதாமா அவர்களின் ஷரஹுல் கபீர்
ஜஸ்ஸாஸ் என்று அறியப்பட்ட அபூபக்ர் அவர்கள் வலிமையாக சூனியத்தை மறுத்திருக்கிறார்.
அவர் கூறுவதைக் கேளுங்கள்.
أحكام القرآن للجصاص ط العلمية (1/ 58)
وَمَنْ صَدَّقَ هَذَا فَلَيْسَ يَعْرِفُ النُّبُوَّةَ وَلَا يُؤْمَنُ أَنْ تَكُونَ مُعْجِزَاتُ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ مِنْ هَذَا النَّوْعِ وَأَنَّهُمْ كَانُوا سَحَرَةً. وَقَالَ اللَّهُ تَعَالَى {وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى} [طه: 69] .وَقَدْ أَجَازُوا مِنْ فِعْلِ السَّاحِرِ مَا هُوَ أَطَمُّ مِنْ هَذَا وَأَفْظَعُ، وَذَلِكَ أَنَّهُمْ زَعَمُوا أَنَّ النَّبِيَّ عَلَيْهِ السَّلَامُ سُحِرَ، وَأَنَّ السِّحْرَ عَمِلَ فِيهِ حَتَّى قَالَ فِيهِ: “إنَّهُ يُتَخَيَّلُ لِيأَنِّي أَقُولُ الشَّيْءَ وَأَفْعَلُهُ وَلَمْ أَقُلْهُ وَلَمْ أَفْعَلْهُ” وَأَنَّ امْرَأَةً يَهُودِيَّةً سَحَرْته فِي جُفِّ طَلْعَةٍ وَمُشْطٍ ومشاقة، حتى أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَأَخْبَرَهُ أَنَّهَا سَحَرَتْهُ فِي جُفِّ طَلْعَةٍوَهُوَ تَحْتَ رَاعُوفَةِ الْبِئْرِ، فَاسْتُخْرِجَ وَزَالَ عَنْ النَّبِيِّ عَلَيْهِ السَّلَامُ ذَلِكَ الْعَارِضُ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى مُكَذِّبًا لِلْكُفَّارِ فِيمَا ادَّعَوْهُ مِنْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَجَلَّ مِنْ قَائِلٍ: {وَقَالَ الظَّالِمُونَ إِنْ تَتَّبِعُونَ إِلَّا رَجُلاً مَسْحُوراً} [الفرقان: 8] .وَمِثْلُ هَذِهِ الْأَخْبَارِ مِنْ وَضْعِ الْمُلْحِدِينَ تَلَعُّبًا بِالْحَشْوِ الطَّغَامِ وَاسْتِجْرَارًا لَهُمْ إلَى الْقَوْلِبِإِبْطَالِ مُعْجِزَاتِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ وَالْقَدْحِ فِيهَا، وَأَنَّهُ لَا فَرْقَ بَيْنَ مُعْجِزَات الْأَنْبِيَاءِ وَفِعْلِ السَّحَرَةِ، وَأَنَّ جَمِيعَهُ مِنْ نَوْعٍ وَاحِدٍ وَالْعَجَبُ مِمَّنْ يَجْمَعُ بَيْنَ تَصْدِيقِالْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ وَإِثْبَاتِ مُعْجِزَاتِهِمْ وَبَيْنَ التَّصْدِيقِ بِمِثْلِ هَذَا مِنْ فِعْلِ السَّحَرَةِ مَعَ قَوْله تَعَالَى: {وَلا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى} [طه: 69] فَصَدَّقَ هَؤُلَاءِ مَنْ كَذَّبَهُ اللَّهُوَأَخْبَرَ بِبُطْلَانِ دَعْوَاهُ وَانْتِحَالِهِ.
وَالْفَرْقُ بَيْنَ مُعْجِزَاتِ الْأَنْبِيَاءِ وَبَيْنَ مَا ذَكَرْنَا مِنْ وُجُوهِ التَّخْيِيلَاتِ، أَنَّ مُعْجِزَاتِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَامُ هِيَ عَلَى حَقَائِقِهَا، وَبَوَاطِنُهَا كَظَوَاهِرِهَا، وَكُلَّمَا تَأَمَّلْتهَا ازْدَدْتبَصِيرَةً فِي صِحَّتِهَا، وَلَوْ جَهَدَ الْخَلْقُ كُلُّهُمْ عَلَى مُضَاهَاتِهَا وَمُقَابِلَتِهَا بِأَمْثَالِهَا ظَهَرَ عَجْزُهُمْ عَنْهَا; وَمَخَارِيقُ السَّحَرَةِ وَتَخْيِيلَاتُهُمْ إنَّمَا هِيَ ضَرْبٌ مِنْ الْحِيلَةِ وَالتَّلَطُّفِلِإِظْهَارِ أُمُورٍ لَا حَقِيقَةَ لَهَا، وَمَا يَظْهَرُ مِنْهَا عَلَى غَيْرِ حَقِيقَتِهَا، يُعْرَفُ ذَلِكَ بِالتَّأَمُّلِ وَالْبَحْثِ وَمَتَى شَاءَ أَنْ يَتَعَلَّمَ ذَلِكَ بَلَغَ فِيهِ مَبْلَغَ غَيْرِهِ وَيَأْتِي بِمِثْلِ مَا أَظْهَرَهُ سِوَاهُ.
சூனியத்தை யார் உண்மைப்படுத்துகிறாரோ அவர் நபித்துவம் பற்றி அறியவில்லை. சூனியத்தை நம்பினால் நபிமார்கள் செய்த அற்புதமும் சூனியத்தின் வகை என்று கருதப்படுவதில் இருந்தும், நபிமார்களும் சூனியக்காரர்களாக இருந்தார்கள் என்று கருதப்படுவதில் இருந்தும் தப்பிக்க முடியாது. 20:69 வசனத்தில் சூனியக்காரன் சூனியம் செய்யும் போது வெற்றி பெற மாட்டான் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அந்தச் சூனியத்தினால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது; தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்லும் அளவுக்கு அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது; யூதப் பெண் சீப்பு தலைமுடி பேரீச்சம் பாளை ஆகியவற்றில் சூனியம் செய்து கிணற்றில் வைத்தாள். ஜிப்ரீல் மூலம் இது நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின் கிணற்றில் இருந்து அதை அப்புறப்படுத்தியதால் சூனியம் விலகியது என்று கேவலமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது.
ஆனால் அல்லாஹ் திருக்குர்ஆன் 25வது அத்தியாயத்தில் 8 வது வசனத்தில் சூனியம் செய்யப்பட்ட மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறினார்கள் என்று சொல்லி நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறிய காஃபிர்களை பொய்யர்களாக்கியுள்ளான். நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டது என்பது போன்ற செய்திகள் இஸ்லாத்தின் எதிரிகள் இட்டுக்கட்டியதாகும். நபிமார்கள் செய்த அற்புதத்தின் தனித்துவத்தை அழிப்பது இவர்களின் நோக்கம். இவர்களின் நம்பிக்கைப் படி சூனியத்துக்கும், நபிமார்களின் அற்புதங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களின் நம்பிக்கைப் படி சூனியம் அற்புதம் எல்லாம் ஒரே வகையானதாகவே ஆக்கப்படுகிறது.
நபிமார்களின் அற்புதமும் உண்மை; சூனியக்காரர்கள் செய்த அற்புதமும் உண்மை எனக் கூறுவோரின் முரண்பட்ட நம்பிக்கை நமக்கு வியப்பளிக்கிறது. சூனியம் செய்யும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்று கூறி சூனியக்காரர்களை அல்லாஹ் பொய்யர்களாக்கி இருக்கும் போது இவர்கள் சூனியக்காரர்களை உண்மையாளர்களாக ஆக்குகிறார்கள்.
நபிமார்களின் அற்புதங்களுக்கும், சூனியக்காரர்களின் தந்திர வித்தைக்கும் உள்ள வித்தியாசம் இது தான். நபிமார்களின் அற்புதங்கள் என்பது அப்படியே மெய்யாகும் வெளியே எப்படி தெரிகிறதோ உள்ளேயும் அப்படித்தான் இருக்கும். நபிமார்களின் அற்புதங்களில் எந்த அளவுக்கு நீ சிந்தனையைச் செலுத்துகிறாயோ அந்த அளவுக்கு அதன் உண்மைத் தன்மை தெரியவரும். உலகமே திரண்டு அது போல் செய்ய முயன்றாலும் அவர்களால் செய்ய இயலாது. சூனியக்காரர்களின் சூனியம் என்பது பொய்யும், தில்லுமுல்லுமாகும். அதன் உண்மை நிலைக்கு மாறாக அதன் வெளித்தோற்றம் இருக்கும். சிந்தித்து ஆய்வு செய்தால் இதைக் கண்டு பிடித்து விடலாம்.
மேலும் ஜஸ்ஸாஸ் அவர்கள் கூறுகிறார்கள்.
أحكام القرآن للجصاص ط العلمية (1/ 57)
وَحِكْمَةٌ كَافِيَةٌ تُبَيِّنُ لَك أَنَّ هَذَا كُلَّهُ مَخَارِيقُ وَحِيَلٌ لَا حَقِيقَةَ لِمَا يَدَّعُونَ لَهَا أَنَّ السَّاحِرَ وَالْمُعَزِّمَ لَوْ قَدَرَا عَلَى مَا يَدَّعِيَانِهِ مِنْ النَّفْعِ وَالضَّرَرِ مِنْ الْوُجُوهِ الَّتِي يَدَّعُونَوَأَمْكَنَهُمَا الطَّيَرَانُ وَالْعِلْمُ بِالْغُيُوبِ وَأَخْبَارِ الْبُلْدَانِ النَّائِيَةِ وَالْخَبِيئَاتِ وَالسُّرُقِ وَالْإِضْرَارِ بِالنَّاسِ مِنْ غَيْرِ الْوُجُوهِ الَّتِي ذَكَرْنَا، لَقَدَرُوا عَلَى إزَالَةِ الْمَمَالِكِ وَاسْتِخْرَاجِالْكُنُوزِ وَالْغَلَبَةِ عَلَى الْبُلْدَانِ بِقَتْلِ الْمُلُوكِ بِحَيْثُ لَا يَبْدَأهُمْ مَكْرُوهٌ، وَلَمَا مَسَّهُمْ السُّوءُ وَلَا امْتَنَعُوا عَمَّنْ قَصَدَهُمْ بِمَكْرُوهٍ، وَلَاسْتَغْنَوْا عَنْ الطَّلَبِ لِمَا فِي أَيْدِي النَّاسِ فَإِذَا لَمْيَكُنْ كَذَلِكَ وَكَانَ الْمُدَّعُونَ لِذَلِكَ أَسْوَأَ النَّاسِ حَالًا وَأَكْثَرَهُمْ طَمَعًا وَاحْتِيَالًا وَتَوَصُّلًا لِأَخْذِ دَرَاهِمِ النَّاسِ وَأَظْهَرَهُمْ فَقْرًا وَإِمْلَاقًا عَلِمْت أَنَّهُمْ لَا يَقْدِرُونَ عَلَى شَيْءٍ مِنْ ذَلِكَ
சூனியக்காரர்கள் எதைச் செய்ய முடியும் என்று சாதிக்கிறார்களோ அது உண்மையாக இருந்தால், மந்திரத்தின் மூலம் நன்மை செய்யவும், தீமை செய்யவும் முடியும் என்பதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், வானத்தில் பறக்க வைப்போம், மறைவானதை அறிவோம். தொலைவான ஊர்களின் செய்திகளையும் அறிவோம் என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் ஆட்சிகளை அகற்றவும், புதையல்களை வெளிக்கொண்டு வரவும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் மன்னர்களைக் கொல்லவும், மற்றவர்களால் தங்களுக்கு எந்தத் தீங்கும் வராமலும் மக்களிடம் கையேந்தாமலும் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லையே? மாறாக மனிதர்களில் இவர்கள் தான் மோசமான நிலையில் உள்ளனர். அதிகம் பேராசை கொண்டவர்களாகவும் மக்கள் பணத்தை ஏமாற்றி பறிப்பவர்களாகவும் பக்கீர்களாகவும் மக்களிடம் குழைந்து பேசுபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் வாதிடக்கூடிய எந்த ஆற்றலும் இல்லை என்று இதில் இருந்து தெளிவாகின்றது.
இவ்வாறு கூறிய அபூபக்ர் அல் ஜஸ்ஸாஸ் அவர்களை முஃதஸிலா என்று சொன்னீர்களா? அல்லது வேறு யாராவது இவரை இப்படி சொல்லியிருக்கின்றார்களா?
முஃதஸிலாக்கள் தவிர ஒருவரும் சொல்லவில்லை என்று சூனியக் கட்சியினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.