சில ரக்அத்களில் சப்தமாகவும் சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்?
சில ரக்அத்களில் சப்தமாகவும் சில ரக்அத்களில் சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்?
சுலைமான்
பதில் :
ஃபஜர் தொழுகையிலும், மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளிலும் மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத்திலும் இஷாத் தொழுகையின் பிந்திய இரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமின்றி ஓதித் தொழ வைக்க வ்.
இவ்வாறு சில தொழுகையில் சப்தமிட்டும் சில தொழுகையில் சப்தமின்றியும் ஓதுவதற்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ காரணம் சொல்லப்படவில்லை. பொதுவாக வணக்கம் தொடர்பான காரியங்களில் காரணங்கள் கூற முடியாது. மார்க்கம் நமக்கு கற்றுக் கொடுத்தவாறு அவற்றை அப்படியே செய்வதே நமது கடமை.
சிலர் தங்களுடைய சுய சிந்தனையைப் பயன்படுத்தி இவற்றுக்கு பலவிதமான காரணங்களைக் கூற முயலுகின்றனர். இவர்கள் அளிக்கும் விளக்கம் எதுவும் ஏற்புடையதல்ல.