017. ஹஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால்?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

நான் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.  எனக்கு ஹஜ் கடைமையாகிவிட்டது. எப்படி செய்வது? 

பதில்:

நீங்கள் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டால், உங்களுக்கு ஹஜ் கடைமையில்லை.

இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும்என்று கங்கணம் கட்டியுள்ள நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழலாம். அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்த நாடுகளால் அல்லது வேறு சக்திகளால் தடுக்கப்படலாம். இத்தகையவர்கள் மீதும் ஹஜ் கடமையாகாது. சென்று வர சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும் என்று இறைவன் கூறுவதிலிருந்து இதனை நாம் அறியலாம். 

”அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.”
(அல்குர்ஆன்: 3:97) 

எனவே, உடல் தகுதி, பொருளாதாரம் உங்களிடம் இருந்தால், சென்று வர சக்தி இல்லாததால்,  உங்களுக்கு ஹஜ் கடைமையில்லை.