ஜும்மாவுக்கு காரணம் என்ன
ஜும்மாவுக்கு காரணம் என்ன
வெள்ளிக்கிழமை மட்டும் ஏன் சிறப்புத் தொழுகை தொழுகிறோம்?
ஃபாத்திமா தக்வியா
பதில்
எல்லா வணக்கங்களும் இறைவனை நினைவு கூர்வதற்காக நமக்கு கடமையாக்கப்பட்டுள்ளது போல் ஜும்ஆவும் அதற்காகவே கடமையாக்கப்பட்டுள்ளது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(9)62
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
ஜும்மாவுக்கும் இதுதான் காரணம்.
இதைத் தவிர வேறு காரணங்களை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொன்னதாக நாம் அறியவில்லை.