02) அரைஞான் கயிறு கட்டலாமா?

நூல்கள்: நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 3512)

தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும்’ என்ற நம்பிக்கையிலும், மதச் சடங்காகவும் தான் மற்ற சமுதாயத்தினர் அரைஞான் கயிறு (இடுப்புக் கயிறு) கட்டுகின்றனர்.

தாலி’ எவ்வாறு பிற மதத்துக் கலாச்சாரமாக உள்ளதோ அது போலவே அரைஞான் கயிறு என்பதும் பிற மதத்தின் கலாச்சாரமாக உள்ளது. இது போன்ற மத விஷயங்களில் பிறருக்கு ஒப்பாகி விடக் கூடாது என்பதால் அரைஞான் கயிற்றைத் தவிர்க்க வேண்டும்.

இது போன்ற நம்பிக்கைகளின்றி, அவசியத் தேவைகளின் நிமித்தம், சாதாரணக் கயிறு என்ற நிலையில் கட்டிக் கொள்வது தவறல்ல. சாவிக் கொத்துக்கள் தொங்க விடுவதற்கும், பெண்களின் மாத விலக்கு சமயங்களில் பயன்படுத்துவதற்கும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் சாதாரணக் கயிறு என்ற நிலையில் அதைக் கட்டிக் கொள்வது தவறல்ல.