79) விரைவாகக் கொண்டு செல்லுதல்
ஜனாஸாவைத் தோளில் சுமந்து விட்டால் ஆடி அசைந்து நடக்காமல் வேகவேகமாகக் கொண்டு செல்ல வேண்டும்.
‘ஜனாஸாவை விரைவாகக் கொண்டு செல்லுங்கள். அது நல்லவரின் உடலாக இருந்தால் நல்லதை நோக்கிக் கொண்டு சென்றவராவீர்கள். அது கெட்டவரின் உடலாக இருந்தால் கெட்டதை (சீக்கிரம்) தோளிலிருந்து இறக்கியவர்களாவீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
‘ஜனாஸா (கட்டிலில்) வைக்கப்பட்டு ஆண்கள் அதைத் தோளில் தூக்கி விட்டால் அது நல்லவரின் உடலாக இருந்தால் சீக்கிரம் கொண்டு போங்கள்’ என்று அது கூறும். அது கெட்டவரின் உடலாக இருந்தால் அய்யஹோ! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?’ என்று கேட்கும். அந்த சப்தத்தை மனிதன் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் செவியுற்றால் மூர்ச்சையாவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)