17) இஹ்ராம் அணிந்தவரின் கஃபன் ஆடை

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் மரணித்து விட்டால் இஹ்ராமின் போது அணிந்த ஆடையிலேயே அவரைக் கஃபனிட வேண்டும்.

இஹ்ராம் அணிந்த ஒருவர் அரஃபா மைதானத்தில் நபிகள் நாயகத்துடன் இருந்த போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து கழுத்து முறிந்து இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவரைத் தண்ணீராலும், இலந்தை இலையாலும் குளிப்பாட்டுங்கள். இவருடைய இரண்டு ஆடைகளில் இவரைக் கஃபனிடுங்கள். இவருக்கு நறுமணம் பூச வேண்டாம். இவரது தலையை மறைக்க வேண்டாம். ஏனெனில் இவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 1265, 1266, 1267, 1268, 1850, 1851)