60) சிரைத்தும் சிரைக்காமலும்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

தலை முடியை மழிப்பது என்றால் தலை முழுவதும் மழிக்க வேண்டும். ஒரு பகுதியை மட்டும் மழித்துவிட்டு மற்ற பகுதியை மழிக்காமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

தமிழகத்தின் சில பகுதிகளில் இரண்டு பக்கம் இரண்டு குடுமிகளை விட்டுவிட்டு மற்ற பகுதியைச் சிரைக்கும் வழக்கம் இருக்கிறது. அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள். ‘முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: நஸயீ 4962,(அஹ்மத்: 5358)