122) குர்ஆன் வசனங்களை ஓதி இறை உதவி தேடுதல்
படுக்கையில் கிடக்கும் நிலையை அடைந்தவர்கள் (குல் ஹுவல்லாஹு அஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின்னாஸ் ஆகிய) திருக்குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி, ஊதிக் கொள்ள வேண்டும். இதை ஓத முடியாத அளவுக்கு வேதனை அதிகமாக இருந்தால் அவரது குடும்பத்தினர் அவருக்காக அதை ஓதி கைகளில் ஊதி அதன் மூலம் அவரது உடலில் தடவ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது (முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று அத்தியாயங்களை நான் ஓதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தடவி விடுவேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்படும் போது தமக்காக கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். அவர்களின் வேதனை கடுமையான போது அவர்களுக்காக நான் ஓதி அவர்களின் கைகளுக்குரிய பரகத்துக்காக அவர்கள் கையால் தடவி விட்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)