19) கடவுள் போதை அடிமையா?

நூல்கள்: இயேசு இறை மகனா?

மதுபானம் அருந்துவதைப் பைபிள் கடுமையாகக் கண்டிக்கிறது. எல்லாத் தீமைகளும் மதுபானம் அருந்துவதால் தான் ஏற்படுகிறது எனவும் பைபிள் கூறுகிறது.

(பார்க்க: நீதிமொழிகள் 23:29-35)

இயேசுவோ மதுபானம் அருந்துபவராக இருந்தார் என்று பைபிள் அறிமுகம் செய்கிறது.

மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப் பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

(மத்தேயு 11:19)

இயேசு மதுபானம் அருந்துபவராக மட்டுமல்ல. அதை மிகவும் விரும்பக் கூடியவராக இருந்தார் என்பதும், இது மக்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தது என்பதும், அதை மக்கள் விமர்சனம் செய்தார்கள் என்பதும், அந்த விமர்சனம் இயேசுவின் காதுகளுக்கு எட்டியது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து தெரிகிறது.

மதுபானம் அருந்திய ஒருவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?

(இயேசு இறைவனின் தூதராக இருந்ததால் அவர் மதுபானம் அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்று இஸ்லாம் அவரைக் கண்ணியப்படுத்துகிறது. பைபிள் அவரை மதுபானப் பிரியர் எனக் கூறுவதால் அதைச் சுட்டிக் காட்டுகிறோம்)