16) கடவுள் தவறு செய்ய மாட்டார்
நூல்கள்:
இயேசு இறை மகனா?
கடவுள் அனைத்து விஷயங்களிலும் நல்லதையே செய்ய வேண்டும். எந்தத் தவறும் செய்யக் கூடாது என்று பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
கர்த்தரைத் துதியுங்கள். அவர் நல்லவர்…
(முதலாம் நாளாகமம் 16:34)
இந்த இலக்கணம் தம்மிடம் இல்லை என்று இயேசுவே மறுத்துள்ளார்.
அதற்கு இயேசு, ‘நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே’ என்றார்.
(மார்க்கு 10:18)