01) முன்னுரை

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கொள்கை விளக்கம் – இஸ்லாத்தின் அடிப்படைகள்

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்!

ஒரு கட்டிடத்தின் உறுதி அதன் அடிப்படையைப் பொறுத்துத்தான் அமைகிறது. அடிப்படை உறுதியானதாக இருந்தால்தான் கட்டிடமும் உறுதியானதாக இருக்கும். அடிப்படை சரியில்லையென்றால் அக்கட்டிடம் தரைமட்டமாகிவிடும்.

இஸ்லாத்தின் அடிப்படை அதன் ஓரிறைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையில் சரியாக இருந்தால்தான் இஸ்லாத்தின் மற்றக் காரியங்களும் வணக்கவழிபாடுகளும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமையும். அடிப்படைக் கொள்கை சரியில்லையென்றால் மற்ற அனைத்துக் காரியங்களும் வீணாகிவிடும்.

இன்றைய முஸ்லி­ம்களில் பெரும்பாலானவர்கள் பெயரளவில்தான் முஸ்லி­ம்களாக இருக்கிறார்களேத் தவிர இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகிய லாயிலாஹா இல்லல்லாஹ் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற க­லிமாவின் பொருளை உணர்ந்தவர்களாக இல்லை.

பெரும்பாலானவர்களுக்கு அல்லாஹ் என்றால் யார்? அவனது பண்புகள் என்ன? எதையெல்லாம்  ஈமான் (நம்பிக்கைக்) கொள்ளவேண்டும்? என்ற அடிப்படையைக் கூட அறியாதவர்களாத்தான் உள்ளனர்.

தர்ஹா வழிபாடு, தாயத்து, தகடுகள், ஜோதிடம், மௌலூது, சகுனம் பார்த்தல் போன்ற எண்ணற்ற இணைவைப்புக் காரியங்களில் இன்றைக்கு முஸ்­லிம்கள் மூழ்கிக் கிடக்கின்றனர்.

எனவே, உண்மையான இஸ்லாமிய கொள்கையை தெளிவாக அறிந்து அதற்குப் புறம்பான செயல்களை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக என்பதற்காக இந்த சிறிய நூலை நாம் தயாரித்துள்ளோம்.

இந்த நூல் இதுவரை இணையதளத்திலும் வெளியிடப்படவில்லை.