01. முன்னுரை
அற்புதங்களா? அபத்தங்களா?
காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும், அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது.
‘அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதை. உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர், இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன.
இனி, இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்களை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.
அன்புடன்.
பீ.ஜைனுல் ஆபிதீன்