நோன்பு திறந்த பின் “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க“ துஆவை ஓதலாமா?
நோன்பு திறந்த பின் ”அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க…” என்று துவங்கும் துஆவை ஓதலாமா?
கூடாது
“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிரஹ்மதிக்கல்லதீ வஸிஅத் குல்ல ஷையின் அன் தக்ஃபிரலீ” என்ற துஆவை இப்னு உமர் (ரலி) அவர்கள் செய்ததாக இப்னுமாஜாவில் 743வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கவில்லை. இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றாகவே இடம் பெற்றுள்ளது.
நபித்தோழர்களின் கூற்று மார்க்க ஆதாரமாக முடியாது என்பதால் இந்த ஹதீஸின் அடிப்படையில் செயல்பட முடியாது.
நோன்பு திறக்கும் போது ஓத வேண்டிய துஆக்கள் என்று ஹதீஸ்களில் இடம் பெறும் அனைத்தும் பலவீனமான செய்திகளாக இருப்பதால் இதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி: 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.