கப்ரின் மேல் எழுதக் கூடாது

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

கப்ரின் மேல் எழுதக் கூடாது

سنن النسائي (4/ 86)

2027 – أخبرنا هارون بن إسحاق قال حدثنا حفص عن بن جريج عن سليمان بن موسى وأبي الزبير عن جابر قال : نهى رسول الله صلى الله عليه و سلم أن يبني على القبر أو يزاد عليه أو يجصص زاد سليمان بن موسى أو يكتب عليه – قال الشيخ الألباني : صحيح

சமாதிகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

(அபூதாவூத்: 2807)

குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காமல் இருப்பது மட்டும் போதாது. அந்த மண்மீது தண்ணீர் தெளித்து இறந்தவரின் பெயரையோ, அவரது புகழையோ எழுதாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றனர்.

அடக்கத்தலத்தின் மேல் மீஸான் என்ற பெயரில் கல்வெட்டை ஊன்றி வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. சில ஊர்களில் இதற்காக ஜமாஅத் நிர்வாகம் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கின்றனர். இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட தடையில் அதுவும் அடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.