அபூபக்ர் (ரலி) அவர்களின் தர்மம்

முக்கிய குறிப்புகள்: மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்

அபூபக்ர் (ரலி) அவர்களின் தர்மம்

3608 حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ قَال سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالًا فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا قَالَ فَجِئْتُ بِنِصْفِ مَالِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ قُلْتُ مِثْلَهُ وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ فَقَالَ يَا أَبَا بَكْرٍ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ قَالَ أَبْقَيْتُ لَهُمْ اللَّهَ وَرَسُولَهُ قُلْتُ وَاللَّهِ لَا أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய்யவேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் செல்வம் என்னிடம் இருந்தது. இன்றைய தினம் நான் அபூபக்ரை முந்திவிட்டால் அவரை நான் முந்திவிடுவேன் என்று கூறிக்கொண்டேன். நான், என் செல்வத்தில் பாதியை கொண்டு சென்றேன். அப்போது நபிகளார், நீ உன் குடும்பத்தாருக்காக எவ்வளவு வைத்துள்ளீர் என்று கேட்டார்கள். இதைப் போன்றளவு என்று கூறினேன். அபூபக்ர் அவரிடமிருந்த அனைத்தையும் கொண்டு வந்தார். நபிகளார் அவரிடம், நீர் குடும்பத்தாருக்கு எவ்வளவு மீதம் வைத்துள்ளீர் என்று கேட்டார்கள். அல்லாஹ்வையும் அவன் தூதரையும் வைத்துள்ளேன் என்றார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை ஒரு போதும் எதிலும் முந்த முடியாது என்று கூறினேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்கள் : திர்மிதீ (3608), அபூதாவூத் (1429), தாரமீ(1601), ஹாகிம் (1442), பைஹகீ (7313), முஸ்னத் அப்து பின் ஹுமைத் (14), பஸ்ஸார் (269)

இந்த செய்தி இடம் பெறும் அனைத்து நூல்களில் ஹிஷாம் பின் ஸஅத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

பஸ்ஸாரின் (169) இன்னொரு அறிவிப்பில் இவரல்லாதவர் இடம் பெறும் செய்தி உள்ளது. என்றாலும் அதில் அப்துல்லாஹ் பின் உமர் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார் இவரும் பலவீனமானவராவார்.