தொழுகையை விட்டால் ஒளி, பரக்கத், வலிமை நீக்கப்படும்
எவர் பஜ்ர் தொழுகையை விட்டு விடுவாரோ அவருடைய முகத்தில் ஒளி நீக்கப்பட்டுவிடும்.
எவர் லுஹர் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய உணவில் பரக்கத் நீக்கப்பட்டுவிடும்.
எவர் அஸர் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடை உடம்பில் வலிமை நீக்கப்பட்டுவிடும்.
எவர் மக்ரிப் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய பிள்ளைகளிடமிருந்து எவ்வித பலனையும் பெறமாட்டார்.
எவர் இஷாத் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய தூக்கத்திலிருந்து நிம்மதி நீக்கப்பட்டுவிடும்.
من ترك صلاة الصبح فليس في وجهه نور ومن ترك صلاة الظهر فليس في رزقه بركة ومن ترك صلاة فليس في جسمه قوة ومن ترك صلاة المغرب فليس في أولاده ثمره ومن ترك صلاة العشاء فليس في نومه راحة
என்று சில அரபி நூல்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் நபிகளார் கூறினார்கள் என்பதற்கு அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த நூலிலும் இடம்பெறவில்லை.