சஹாபியை திட்டினால் அல்லாஹ் சபிக்கிறான்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

நபித்தோழர்களை திட்டுபவர்களை அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : தப்ரானீ – கபீர், பாகம் :11, பக்கம் : 64

المعجم الكبير للطبراني (11/ 388، بترقيم الشاملة آليا) 913- حَدَّثَنَا مُحَمَّدُ بن نَصْرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بن عِصَامٍ الْجُرْجَانِيُّ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن سَيْفٍ ، حَدَّثَنَا مَالِكُ بن مِغْوَلٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : لَعَنَ اللَّهُ مَنْ سَبَّ أَصْحَابِي . لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مَالِكِ بن مِغْوَلٍ إِلا عَبْدُ اللَّهِ بن سَيْفٍ تَفَرَّدَ بِهِ : عَبْدُ الْحَمِيدِ بن عِصَامٍ اللَّهِ بن عُمَرَ

இந்த இரண்டு அறிவிப்புகளிலும் அப்துல்லாஹ் பின் ஸைஃப் என்பவர் இடம்பெற்றுள்ளார்.

الضعفاء للعقيلي (2/ 264) 818- عَبد الله بن سيف عن مالك بن مغول حديثه غير محفوظ وهو. مَجهولٌ بالنقل

அப்துல்லாஹ் பின் ஸைஃப் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


فضائل الصحابة لأحمد بن حنبل ـ مشكول (1/ 52) 8- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ ، قَالَ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ يَزِيدَ الصُّدَائِيُّ قَالَ : حَدَّثَنِي أَبُو شَيْبَةَ الْجَوْهَرِيُّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ أُنَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّا نُسَبُّ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ سَبَّ أَصْحَابِي فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ ، وَالْمَلاَئِكَةِ ، وَالنَّاسِ أَجْمَعِينَ ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلاً.

யார் எனது தோழர்களை திட்டுவாரோ, அவர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். அவனிடமிருந்து அல்லாஹ், எந்த நஷ்டஈடும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : பழாயிலுஸ் ஸஹாபா, பாகம் :1, பக்கம் : 52)

இச்செய்தியில் அலீ பின் யஸீத் அஸ்ஸதாயீ என்பவரும் அபூஷைபா அல்ஜவ்ஹரீ என்வரும் பலவீனமானவராவார்.