தலாக் கூறினால் அர்ஷ் நடுங்கும்
விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா?
أخبار أصبهان – (1/ 194)
عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجُوا وَلَا تُطَلِّقُوا، فَإِنَّ الطَّلَاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»
திருமணம் செய்யுங்கள் ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அக்பாரு அஸ்பஹான்-240 , தாரீகு பஃக்தாத்-6654 ,
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஜூவைபிர் என்பவர் மிகவும் பலவீனமானவர். இவரை ஹதீஸ் துறை இமாம்களான யஹ்யா பின் ஸயீத், அஹ்மத், இப்னு மயீன், நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் முறையே பலவீனமானவர் இவரது ஹதீஸில் கவனம் செலுத்தப்படாது ஹதிஸ் துறையில் மதிப்பில்லாதவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளார்கள்
நூல்: அல்லுஅஃபாஉ வல்மத்ரூகீன், பாகம்: 1 , பக்கம்: 177.