சொத்து மிகக்குறைவாக இருந்தால், பிரித்தால் உபயோகமாகாது என்றால்…
சொத்து மிகக்குறைவாக இருந்தால், பிரித்தால் உபயோகமாகாது என்றால், இருக்கும் சொத்து முழுவதையும், இறந்தவரின் மனைவியோ அல்லது மகனோ மட்டும் எடுத்துக் கொள்ளலாமா?
கூடாது.
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். அல்குர் ஆன் 4:7
அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். அதேபோல பெண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே என்று குறிப்பிடுகிறான்.
சொத்து குறைவாக இருக்கிறது அல்லது அதிகமாக இருக்கிறது என்பது பிரச்சினை அல்ல. மாறாக, நெருங்கிய உறவினர் விட்டுச் செல்லும் சொத்தில் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பாகம் உண்டு என்று அல்லாஹ் கூறியுள்ளான். எனவே,
எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும், அதை விற்று கிடைக்கும் தொகையை, உரியவர்கள் அனைவருக்கும் பங்கு பரிக்க வேண்டும். மற்றவர்கள் தானாக விரும்பி விட்டுத் தந்தாலே தவிர, ஓரிருவர் மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதியில்லை.