நஜ்ஜாஷி மன்னர் திருமண விருந்து கொடுத்தாரா?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

நபிகள் நாகயமும் அன்னை உம்மு ஹபீபா அவர்களும் திருமணம்செய்த போது, உம்மு ஹபீபா அவர்களின் தந்தை அபிசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் தானாக முன்வந்து வலீமா விருந்து கொடுத்தார்கள்.

இந்தச் செய்தி ஹாகிம் தலாயிலுன் நுபுவ்வா மற்றும் தபகாத்துல் குப்பரா ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியை உம்மு ஹபீபா (ரலி) கூறியதாக இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஹிஜ்ரீ 130ல் மரணிக்கின்றார். உம்மு ஹபீபா (ரலி) ஹிஜ்ரீ42 ல் மரணிக்கின்றார்கள். எனவே இவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இவர் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இவ்விருவருக்கும் இடையே அறிவிப்பாளர் யாரோ விடுபட்டுள்ளார். விடுபட்ட அந்த நபர் யார்? அவர் நம்பகமானவரா? என்பது உறுதி செய்யவிடவில்லை.

மேலும் இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஸுஹைர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இதன் காரணத்தால் இந்த செய்தி பலவீனமானதாகும்.