வீட்டின் முன் அல்லாஹு அக்பர் என்று எழுதலாமா?

கேள்வி-பதில்: பித்அத்

வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்று அல்லது லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று எழுதலாமா? பிரேம் போட்டு தொங்க விடலாமா? விளக்கம் தேவை.

 

பதில் :

அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள்) ஆகிய வாசகங்களை வீட்டில் தொங்கவிடுவது தவறல்ல. வீட்டுக்கு வருபவர்கள் இதைப் படிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தால் இதை மார்க்கம் தடை செய்யவில்லை.

இதுபோன்ற வாசகங்களை கூறினால் வீட்டுக்கு பரகத் வரும். பேய் பிசாசு வராது என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்வது கூடாது