வள்ளுஹா வல்லைலி இதா சஜா…

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது இரண்டு இரவுகள் அல்லது மூன்று இரவுகள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என நினைக்கிறேன். (அதனால் தான்) இரண்டு இரவுகளாக அல்லது மூன்று இரவுகளாக உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை என்று கூறினாள்.2 அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், முற்பகளின் மீது சத்திய மாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை எனும் (93:1-3) வசனங்களை அருளினான்.

(புகாரி: 4950)