09) பேரண்டத்திற்குக் கடவுளின் தேவை

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்

அத்தியாயம் 8

பேரண்டத்திற்குக் கடவுளின் தேவை

நாம் இது வரை பண்டைகால உலகை அடியோடு மாற்றி அமைத்த அறிவியல் உலகில் அறிவுப்புரட்சியை (Intellectual revolution) ஏற்படுத்திய சில அதி மகத்தான அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்த்தோம். இதன் விளைவாகப் பேரண்டம் என்றால் என்ன? என்றும் அது எவ்வாறு தோன்றி யது? எவ்வாறு செயல்படுகிறது? என்பதையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் பேரண்டம் எதற்காகத் தோன்றியது? என்ற வினாவை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

ஒரு விதத்தில் இந்த வினா சிலருக்கு விரும்பத்தகாத தாகவே தோன்றும். பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு உணவாக பூமியில் என்னென்ன இருக்கின்றன என்றும் அவைகளை எவ்வாறு உற்பத்தி செய்யலாம் என்றும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டிய போதும் இவைகளையெல்லாம் பூமி ஏன் உற்பத்தி செய்தது என்ற வினாவை புறக்கணிப் பதையே வசதியாகக் கருதுகிறார்கள். மழையின்றி வாழ இயலாதவர்கள் மழை ஏன் பொழி கிறது என்றோ காற்றில்லாமல் வாழ முடியாதவர்கள் காற்று மண்டலம் ஏன் தோன்றியது என்றோ சிந்தித்துப் பார்க்காமல் தவிர்த்து விடுவதையே வசதியாகக் கருதுகிறார்கள். எனவே இத்துறை தத்துவஞானிகளின் குத்தகையாக மாறியது.

இவர்களின் கூற்றுகள் எதுவும் சர்ச்சைக்கு இடமில்லாமல் ஏற்கப்பட்டு வந்தன. ஆயினும் சமீபத்தில் தோன்றிய அறிவியலாளர்கள் சிலர் பேரண்டம் எதற்காகத் தோன்றி யது? என்ற கேள்வியை மட்டும் அறிவியலாளர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்? எனச் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இன்று சில செய்திகள் தெரியாமல் போயினும் நாளையும் அவை தெரியப் போவதில்லை என ஏன் முடிவு செய்ய வேண்டும்? என சிந்திக்கின்றனர். அறிவியலாளர் ஷேப்லி அப்படிப்பட்ட ஒருவராகத் தெரிகிறார். அவர் ஓரிடத்தில் தமது கருத்தை இவ்வாறு தெரிவிக்கிறார்.

அறிவியலாளர்களின் எதிர்பார்ப்பு

பேரண்டம் என்பதென்ன? அது எவ்வாறு செயல்படு கிறது? பேரண்டம் எதற்காக?

முதல் கேள்வி பேரண்டம் என்பது என்ன? இந்த வினாவிற்கு அடிப்படையான வழிமுறையில் (Elemantary Way) பொருட்கள், ஈர்ப்பு விசை, காலம், செல்களிலுள்ள உயிர்மப் பொருட்கள் (ஞசடிவடி ஞடயளஅ) போன்ற சிலவற்றைக் குறித்து முழுமையற்றதாயினும் ஓரளவு துணிச்சலான பதிலை (Proto Plasm) உருவாக்கி முணுமுணுக்கலாம்.

“எவ்வாறு? எனும் கேள்விக்கு இயற்கை விதிகளைப் பற்றியும், வெப்பத்தின் இறப்பையும் (death) காலக்சிகளின் விலகி ஓட்டத்தையும் விளக்க முயற்சிக்கலாம். ஆனால் மூன்றாவது கேள்வி பேரண்டம் “எதற்காக? என்பதற்கு “கடவுளே அறிவார்! என்று கூறி எங்களுக்கு வியக்கவே தோன்றுகிறது என்பதோடு இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட (restricted) செய்தியே என்பது வெளிப்படையாகும்.

ஏதோ சில திருத்த முடியாத காரணத்திற்காக “பேரண் டம் எதற்காக? என்பது மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும்?என எங்களை நாங்களே வினவ ஆரம்பிக்கிறோம். மேலும் இப்போதுள்ள தொலை தூரப் புதிர்கள் எக்காலமும் இரகசியங்களின் பட்டியலிலேயே நிலைநிற்கும் எனும் கருத்தை நாம் ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? முன்னோர் களால் விளங்க முடியாமலிருந்த பலவும் நம்மைப் பொருத்த வரை நியாயமான பொதுப்படை சத்தியங்களாகவோ,இயக்கங்களாகவோ மாறி விட்டன. புதிர்களின் அடிப்படை மறைந்து விட்டது.

நாம் கடினமாகப் பணியாற்றவும், சரியாக மற்றும் ஆழமாக சிந்திக்கவும் தொடர்ந்து முயற்சித்தால் பேரண்டத்தின் “பல பிரதான எதற்காக? களில் சிலவற்றிற்கு நாம் விடையளிப் பவர்களாக மாட்டோமா? தத்துவ ஞானிகள் இல்லை என்றே கூறக் கூடும். ஆயினும் நான் இந்த வினாவை நிலை நிறுத்து கிறேன். (பக்கம் – 5)

இயற்கையும் சில அடிப்படை உண்மைகளும்

இயற்கையும் படைப்பும் (படைப்புப் பணி) ஒரு நாணயத்திற்கிருப்பதைப் போன்று ஒரு படைப்பினத்தின் இரு புறங்களாகும். எனவே அவை இரண்டும் ஒரே நேரத்தி லேயே தோன்றுகின்றன. இந்த விளக்கத்திலிருந்து இரண்டு உண்மைகள் வெளிப்படுகின்றன. முதலாவது உண்மை பொருள் இல்லையேல் அப்பொருளின் இயற்கையும் இல்லை என்பதாகும். எனவே பொருட்கள் எதுவும் இல்லையென்றால் `இயற்கை என எதுவும் இல்லை என்பதும் அதன் பொருளா கும். இரண்டாவது பொருள் தோன்றுவதற்கு முன் அதன் இயற்கை ஒரு போதும் தோன்ற முடியாது என்பதாகும்.

மேற்கண்ட அடிப்படை உண்மைகளோடு கூட்டி வாசிக்க வேண்டிய மற்றொரு அடிப்படை உண்மை யாதெனில் எப்பொருளுக்கெல்லாம் `தோற்றம் என்ற ஒன்று உண்டோ அவை அனைத்திற்கும் `தோற்றுவாய் என்ற ஒன்றும் உள்ளது என்பதாகும். இந்த உண்மையில் உள்ளடங்கி நிற்கும் மற்றொரு செய்தி “தோன்றிய பொருட்கள் தோற்ற மடைவதற்கு முன்பே அதன் தோற்றுவாய் இருந்துள்ளது என்பதாகும். இப்போது நாம் எடுத்துச் கூறிய அடிப்படை உண்மைகளை ஓர் உதாரணத்தில் பொருத்திப் பார்த்து விளங்க முயற்சிப்போம்.

ஆகாயப் புரட்டு

பூமியில் உணவுப் பொருட்கள் தோன்றச் செய்வது யார்? என்ற கேள்விக்கு “அது பூமியின் இயற்கை என ஒருவர் பதில் கூறுகிறார் எனக் கொள்வோம். இக்கூற்று பூமியில் உணவுப் பொருட்களைத் தோற்றுவிப்பது பூமியின் குணமாகும் என்பதே அதன் பொருளாகும். இதையே இயல்பு என்றும் கூறுகிறோம்.

உணவுப் பொருட்களைத் தோற்றுவிப்பது பூமியின் இயற்கையே (பூமியின் குணமே) என பதிலளிக்கப்பட்டால் அதன் மறு பக்கத்தை நாம் “(பூமியின் இயற்கையே உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது என்றால்) பூமி தோன்றுவ தற்கு முன் (உணவைத் தோற்றுவிக்கும்) அதன் இயற்கையும் இருந்ததில்லை என வாதிக்கலாம்.

உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது பூமியின் இயற்கை எனக் கூறியவரிடம் நாம் தொடர்ந்து மற்றொரு வினாவை எழுப்புகிறோம். “உணவுப் பொருட்களைத் தோற்றுவித்தது இயற்கையே என்றால் அந்த பூமியைத் தோற்றுவித்தது யார்? இந்த வினாவிற்கு அந்த நபர்“பூமியைத் தோற்றுவித்தது அது உள்ளடங்கி இருக்கும் காலக்சியின் இயற்கை! என பதிலளிப்பார். நாம் உடனே அந்த சங்கிலித் தொடரிலிருந்து அடுத்த கேள்விக்குச் செல்கிறோம்.

பூமியைத் தோற்றுவித்தது காலக்சியின் இயற்கையே என்றால் காலக்சியைத் தோற்றுவித்தது யார்? இந்த விளாவிற்கு அது “பேரண்டத் தின் இயற்கை என பதிலளிக்கப்படும். கடைசியாக “அனைத்தையும் தோற்றுவித்தது பேரண்டத்தின் இயற் கையே என்றால் பேரண்டத்தை தோற்றுவித்தது யார்? என்று கேட்கிறோம். இக்கேள்விக்கு பேரண்டம் தோற்றுவிக்க வேண்டிய தேவையே இல்லை!

ஏனெனில் அது தோற்றமோ அழிவோ இல்லாதது என்றே பதிலளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இவ்வளவு நாளும் உலகில் பெருவாரியான மக்களை ஏமாற்றி வந்த அகில உலக ஆகாயப் புரட்டை பெரு வெடிப்புக் கோட்பாடு பச்சைப் பொய் என நிரூபித்து பேரண்டத்திற்கு தோற்றமும் முடிவும் உண்டு என உறுதி செய்து விட்டது. எனவே இதற்கு மேல் பேரண்டத்தைத் தோற்றுவித்தது யார்?என்ற கேள்விக்கு என்ன பதில் கூற முடியும்?

இயற்கையின் அழிவு

விடைகிட்டா வினாக்களின் ஒரே பதிலாக நாத்திகக் கோயில்கள் பூஜை செய்யப்பட்டு வந்த ஏக விக்கிரகமாம் “இயற்கையில் சரடைந்தால் இந்த வினாவிற்கு பதில ளிக்க முடியுமா?ஒரு காலும் முடியாது! ஏனென்றால் பேரண்டம் தோன்றியது பெரு வெடிப்பி லிருந்தே என்றும் அந்த பெருவெடிப்புக்கு முன்னால் எதுவுமே இருந்ததில்லை என்றும் அறிவியல் நிரூபித்து விட்டது.

பெருவெடிப்புக்கு முன் ஒன்றுமே இல்லை யென்றால் பெருவெடிப்புக்கு முன் இயற்கையும் இல்லை என்பதே அதன் பொருளாகும். இல்லாத இயற்கையால் பெருவெடிப்பை எவ்வாறு நிகழ்த்த முடியும்? எனவே இயற்கை வாதம் இங்கு முற்றிலும் அழிவைத் தழுவி விட்டது. எனவே பேரண்டத்தைப் படைத்தது இயற்கை அன்றி ஆற்றல் மிகு படைப்பாளன் இருந்தாக வேண்டும் என்பது சர்ச்சைக்கு இடமில்லாத பேருண்மையாகும்.

இறக்கைகள் இல்லாமல் இராக்கெட் எவ்வாறு பறக்கிறது? எனக் கேட்டால் இறக்கைகளால் பறப்பது பறவைகளின் இயற்கை; இறக்கைகள் இல்லாமல் பறப்பது இராக்கெட்டின் இயற்கை என பதில் கூறப்படலாம். இதற்காக இராக்கெட்டைப் படைத்தது இயற்கை எனக் கூற முடியுமா? ஒரு பொருள் அது உயிருள்ளதாயினும், உயிரற்றதாயினும் அப்பொருளின் இயற்கைக் குணங்கள் யாவும் அப்பொருளின் படைப்பில் உடன் நிகழ்வுகளாகும். பொருள் இல்லாமல் இயற்கையும் இல்லை; இயற்கை இல்லாமல் பொருளும் இல்லை.

பொருள் இல்லாத இயற்கை என்பது அர்த்தமற்ற வெற்று வார்த்தையாகும். எனவே பொருள் படைப்பினமே (படைக்கப்பட்டதே) எனில் அதன் இயற்கையும் படைப்பின மாகும். பொருளின் இயற்கைக்கு ஒரு போதும் அதன் படைப் பாளனாக இயலாது. பேரண்டம் என்பதும் ஒரு பிரமாண்டமான பொருட்குவியலாக இருப்பதால் அதற்கு ஒரு படைப்பாளன் இருந்தே ஆக வேண்டுமென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மீண்டும் பழைய பல்லவி

பெருவெடிப்புக் கோட்பாடும் இயற்கை பற்றி கூறப்பட்ட பொருள் விளக்கமும் உள்ளபடியே நாத்திகக் கோட்பாட்டிற்கு பலத்த அடியாகும். இந்தத் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள அவர்களிடம் எஞ்சி இருப்பது ஆதிகாலம் தொட்டு அவர்கள் எழுப்பி வந்த வெறும் ஒரு பாவனை வாதம் (அர்தமற்றதே ஆயினும் அர்த்தமுள்ளதைப் போன்று போலித் தோற்றத்தை உருவாக்கும் வாதம்) மட்டுமேயாகும். அந்த வாதம் இதோ : அனைத்தையும் தோற்றுவித்தது கடவுளேயானால் கடவுளைத் தோற்றுவித்தது யார்? கடவுளுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை விளங்காததால் அல்லது புறக்கணிப்பதால் எழும் வினாவே இதுவாகும்.

பேரண்டமும் இதிலுள்ள உயிருள்ளதும் இல்லாதது மான பொருட்கள் யாவும் சில அடிப்படைத் துகள்களால் உருவானவைகளே என்பது நமக்குத் தெரியும். அவ்வாறு உருவாகியுள்ள பொருட்களின் இயற்பியல் குணங்கள் பேரண்டத்தில் நிலவும் விதிகளுக்கு உட்பட்டவை யாகும் என்பதும் நமக்குத் தெரியும். மேலும் இப்பேரண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் இப்பேரண்டத்தின் விதிகளால் ஆளப்படுகின்றன என்பதும் அந்த விதியின் ஆளுகையி லிருந்து அவைகளால் தப்பிச் செல்ல முடியாது என்பதும் நமக்குத் தெரியும். இந்த விளக்கத்திலிருந்து பேரண்டமும் அதிலுள்ளவை யாவும் இப்பேரண்டத்தில் நிலை நிற்கும் விதிகளுக்கு அடிமைப்பட்டவை என்பது ஐயமறத் தெரிய வருகிறது.

எப்பொருளின் தோற்றமும் முடிவும் அதற்கிடைப்பட்ட காலத்தில் அதனுடைய வாழ்க்கையும் மீறமுடியாத விதி களுக்கு அடிமைப்பட்டுள்ளதோ அவை யாவும் படைப் பினங்களே என்பதை மேலும் விளக்கத் தேவையில்லை. ஆகவே இப்பொருட்களின் படைப்பாளன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதும் அப்படைப்பாளன் யார்? என்ற கேள்வியும் அர்த்தமுள்ளதாகும். ஆனால் படைப்பாளனுக்கும் கூட மற்றொரு படைப்பாளனைக் கற்பளை செய்யும் அறியாமையிலிருந்து எழும் படைப்பாளனின் படைப்பாளன் யார்? என்ற கேள்வி மிகவும் அர்த்தமற்ற கேள்வியாகும்.

படைப்பாளனின் நிலை பப்பினங்களின் நிலையி லிருந்து ஒப்பிட முடியாத அளவிற்கு வேறு பட்டதும் உயர் நிலைத் தகுதி உடையதுமாகும். இதன் காரணமாக அவன் படைக்கும் ஆற்றலைக் கொண்டவனாகவும் அவனன்றி வேறு யாருமே எதையும் படைக்க இயலாதவர்களாகவும் இருக்கிறார் கள். (மனிதர்கள் நிறையவே படைத்துக் கொண்டிருந்தாலும் அப்படைப்பினங்களின் மிக இன்றியமை யாத மூலப் பொருட்களை (raw materials) அவர்கள் படைப்பதில்லை என்பதைக் கருத்தில் கொள்க) படைப்பினங்களிலிருந்து இவ்வாறு வேறுபட்டு இருப்பதாலேயே அவன் படைப்பினங் களாலும் எட்டிப்பிடிக்க முடியாத சிறப்பியல்பில் நிலை கொள்கிறான்.

அவனுடைய மாட்சிமை பொருந்திய “திரு உடல் படைப்பினங்களின் உடலைப் போன்று பேரண்டத் தில் உள்ள ஏதேனும் அடிப்படைத் துகள்களிலிருந்து தோன்றி யது இல்லை. ஏனெனில் பேரண்டத்தைத் தோற்றுவித்த பெருவெடிப்புக்கும் முன்னிருந்தே அவன் இருக்கிறான்.

படைப்பாளனாகிய இறைவன் எப்போதும் உள்ளவனா வான். அவனுக்கு தோற்றமோ முடிவோ இல்லை. அவனே அனைத்திற்கும் தோற்றுவாயாகவும் அவைகளின் வாரிசாகவும் இருக்கின்றான். மேலும் பேரண்டத்தில் செயல்படும் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்கும் படைப்பினங்களைப் போலன்றி அந்த விதிகளுக்கே தோற்றுவாயாகவும் அவைகளை ஆள்பவனாகவும் இருக்கிறான்.

ஆகவே எந்தெந்த காரணங்களால் படைப்பாளன் இல்லாமல் படைப்பினங்கள் தோன்ற முடியாதோ அவ்வகை காரணங்கள் அனைத்திலிருந்தும் அப்பாற்பட்டவனாகவும் தூய்மையான வனாகவும் இருக்கின்றான். எனவே படைப்பாளன் ஒரு போதும் படைக்கப்பட்டவனாக இருத்தல் இயலாத தாகும். இதையே வேறு வார்த்தையில் கூறினால் படைக்கப்பட்டவை எதுவும் படைப்பாளனாக முடியாது என்பதாகும்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து படைப்பினங்களைப் பற்றி கேட்பதைப் போல் படைப்பாளனின் படைப்பாளன் யார்? என்று கேட்பது முழு அபத்தமாகும் என்பதை எளிதாக விளங்கலாம்.

நாத்திக வாதத்தின் கணிதப் பிழை

படைப்பாளனைத் தோற்றுவிக்க மற்றொரு படைப் பாளன் தேவை என்ற வாதம் பிழையானதும் நகைப்பிற்குரிய தாகும் என்பதை மேலும் நுட்பமாக கீழ்க்கண்டவாறு விளங்கலாம்.

பேரண்டத்தைப் படைத்த படைப்பாளன் தோன்ற வேண்டுமானால் அவனைத் தோற்றுவிக்க மற்றொரு படைப்பாளன் தேவையென்று கூறினால் அந்த இரண்டாவது படைப்பாளனுடன் பிரச்சனை தீரப் போவதில்லை. அந்த வாதம் இரண்டாவது படைப்பாளனைத் தோற்றுவித்த மூன்றாவது படைப்பாளன் தேவையென்றும் அந்த மூன்றா வது படைப்பாளனைத் தோற்றுவித்த நான்காவது படைப்பாளன் தேவையென்றும் வாதிடத் தொடங்கி முடிவற்ற (கேவைந) படைப்பாளர்கள் தோன்ற வேண்டிய நிர்பந்தத்தை அந்த வாதம் ஏற்படுத்தும்.

வேறு வார்த்தையில் கூறினால் இப்பேரண்டம் தோன்ற வேண்டுமானால் அதற்கு முன் முடிவற்ற படைப்பாளர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும். ஆனால் முடிவற்ற நிகழ்ச்சிக்கு முடிவு என்பதே இல்லையென்பதால் படைப்பாளர்கள் தோற்றுவிக்கப்படும் நிகழ்ச்சி இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். நாளையும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். நாலாயிரம் கோடானு கோடி வருடங்களுக்குப் பிறகும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு விதத்தில்!

ஆம்! படைப்பாளனால் தோற்றுவிக்கப்பட வேண்டிய பேரண்டம் இப்போது தோன்றி விட்டது! இது ஒரு மறுக்க முடியாத சத்தியமாகும். படைப்பாளர்களின் தோற்றத்திற்கே முடிவில்லையென்றால் அதன் பிறகு தோன்றி இருக்க வேண்டிய பேரண்டம் இப்போதே எவ்வாறு தோன்றி இருக்க முடியும்? எனவே “யாவையும் தோன்றுவித்தது கடவுளே என்றால் கடவுளைத் தோற்றுவித்தது யார்? எனும் கேள்வி ஒரு கணிதப் பிழையிலிருந்து உருவானதாகும். பேரண்டத் தைத் தோற்றுவித்தது கடவுள் என்றால் அந்தக் கடவுளைத் தோற்றுவிப்பதற்கும் ஒருவர் வேண்டும் எனும் வாதமும் கணித முறைப்படி பிழையான வாதமாகும்.

இரட்டை வேடம்

கடவுளின் தோற்றுவாய் பற்றி கேள்வி எழுப்புவது அபத்தமாகும் என்பதற்கு மற்றும் ஓர் காரணத்தைக் காண்போம். கடவுளின் இறைமை குணங்களில் `நிரந்தரன் (ஆதி அந்தம் இல்லாமல் என்றும் உள்ளவன்) என்பதும் ஒன்றாகும். நிரந்தரனான (Eternal) கடவுளை யாரேனும் தோற்றுவித்து இருப்பின் கடவுளுக்கு தோற்றம் (தோற்ற மெடுத்த நாள்) உண்டு எனப் பொருளாகி விடும். தோற்றம் உண்டென்றால் தோற்றமெடுத்த நாளுக்கு முன் கடவுள் இல்லை எனப் பொருளாகி விடும். கடவுள் என்றாலே `நிரந்திரன் (என்றும் உள்ளவன்) என்றிருக்கையில் அக் கடவுளைத் தோற்றுவித்தவர் யார் என்ற கேள்வி அபத்தமோ அபத்தமாகும்.

இங்கு நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு செய்தி நாத்திகத்திற்கு கடவுளைப் பற்றி பேசும் போது மட்டுமே இது போன்ற அபத்தங்கள் ஏற்படுகின்றன என்பதும் மற்றவை களைப் பற்றிப் பேசும் போது இப்படிப்பட்ட அபத்தங்கள் ஏற்படுவதில்லை என்பதுமாகும். சான்றாக நாத்திகர்கள் பேரண்டம் நிலையானது; என்றும் உள்ளது என்ற எண்ணத்தில் இருந்தவர்கள். எனவே பேரண்டம் எப்படித் தோன்றியது? என்று ஆத்திகர்கள் வினவினால்“பேரண்டம் யாராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை; ஏனெனில் அது என்றும் உள்ளது என பதில்கூறுவார்கள். ஆனால் என்றும் உள்ளவனான கடவுளைப் பற்றி கூறும் போது மட்டும்“கடவுள் மட்டும் எப்படி தோற்று விக்கப்படாமல் தோன்ற முடியும்? முடியவே முடியாது! என அடம் பிடிப்பார்கள்.

நமது அன்றாடக் காட்சி வழக்கில் ஒவ்வொரு நாளும் புதியன தோன்றி பழையன அழிந்து கொண்டிருக்கும் பொருட் குவியலால் தோன்றிய இப்பேரண்டம் தோற்றமோ முடிவோ இல்லாதது எனக் கூறி கடவுளைப் புறக்கணிப்பது அபாரமான அசட்டுத் துணிச்சலே என்றால் மிகையாகாது. இவ்வளவு நாளும் பேரண்டத்திற்கு ஒரு தொடக்கம் இருந்துள்ளது என்பதை அறிவியலால் நிரூபிக்க இயலாது போனதால் பேரண்டத்திற்கு கடவுள் இல்லை என அறிவியலின் பெயரால் பறை சாற்றிக் கொண்டிருந்த நாத்திகம் ஆத்திகர்களின் ஒழுக்க நெறியிலிருந்து (Morality) சமுக நெறிமுறை மற்றும் சம்பிரதாயங்கள் (Ethics and Rituals) வரை யாவையும் கேலி செய்து கொண்டிருந்தது. ஆயினும் அக்கேலிச் சொற்கள் யாவையும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பெருவெடிப்புக் கொள்கை பூமராங் (Boomerang) ஆக மாற்றி விட்டது. அறிவியலே தங்கள் மதம் என்று கூறிக் கொண்டிருந்த இவர்கள் இதற்கு மேல் கடவுட் கோட்பாட்டைத் தாக்க எந்த ஆயுதத்தைத் தேடப் போகிறார்கள்?

மானிடனின் விளங்கு திறன்

கடவுளை ஏற்பதில் நாத்திக சித்தாந்தத்திடம் இரண்டு பெரும் பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றுள் முதலாவது பொய்யான குட்டிக் குட்டிக் கற்பனை தெய்வங் களைப் போலன்றி மெய்யான ஏக இறைவன் என்பது எந்த நபராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடிகாத அளவு அறிவும் ஆற்றலும் பொருந்திய ஒருவனாவான். இப்படிப்பட்ட ஒருவன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்? இப்படிப்பட்ட எந்த ஒன்றும் எந்த ஒருவரும் எங்குமே இருப்பதாக யாரும் பார்க்கவோ, கேள்விப்படவோ செய்யாத போது அதிலிருந்து விதிவிலக்காக கடவுள் மட்டும் அப்படிப்பட்ட அறிவோடும் ஆற்றலோடும் என்றென்றும் இருக்கிறார் எனச் சிலர் கூறு வதை மானிட அறிவால் புரிந்து கொள்ள முடியவில்லையே?

அறிவால் புரிந்து கொள்ள இயலாததை ஏற்பது முட்டாள்தனமாகும் என்பன போன்ற எண்ணங்கள் கடவுளை ஏற்பதில் நாத்திகத்தின் முதலாவது முட்டுக்கட்டையாகத் தெரிகிறது.

மானிட அறிவால் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒன்றுமே எங்கும் இருக்க முடியாது என்ற தப்பெண்ணமே இந்த முட்டுக்கட்டைக்குக் காரணமாகும். மனிதனுடைய சிந்தனையும், அவனுடைய கற்பனையும் ஒரு எல்லைக்குட் பட்டதே அன்றி அந்த எல்லைக்கப்பால் உள்ளதைப் பற்றி சிந்திக்கவோ, கற்பனை செய்து பார்க்கவோ முடியாது என்பதை அறிவியலாளர்கள் பல உதாரணங்களால் எளிதாக விளங்கச் செய்கிறார்கள். ஒரு கிலோ மீட்டர் தூரம் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்கிறோம்; கற்பனையும் செய்கிறோம்.

ஆனால் ஒரு கோடி கிலோ மீட்டர் என்பதை எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை ஒரு போதும் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. இதைப் போல பத்து அங்குல நீளமும், ஒரு அங்குல பருமனும் உள்ள மரக்கட்டையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். பருமனே இல்லாத பத்து அங்குல கட்டையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை.

அறிவியலாளர்கள் தரும் மேற்கண்ட உதாரணங்களி லிருந்து நமது சிந்தனைக்கும் விளங்கிக் கொள்ளும் ஆற்றலுக்கும் எல்லை உண்டென்பதை நன்கு விளங்கு கிறோம். நாம் பெற்றுள்ள விளங்கு திறன் (ருனேநசளவயனேபே யடைவைல) எல்லைக்குட்பட்டதாகும் என்பதையும் சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.

ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம்

வார்னர் ஹைசன் பர்க் (Warner Heisen Berg) எனும் அறிவியலாளர் 1926ல் ஒரு புரட்சிகரமான கோட்பாட்டை உருவாக்கினார். அநிச்சய தத்துவம் (Uncertainity Principle) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணு (Electron) எனும் மிகமிக சூட்சுமமான துகள்கள் அணுவின் மையக் கருவைச் சுற்றி ஒளியின் வேகத்தில் சுழல்கின்றன. அத்துகள்களின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வேகமும் அந்த நேரத்தில் சுற்றுப் பாதையில் அது இருக்கும் இடத்தை யும் அளக்க முயலும் போது ஏற்படும் விளைவிலிருந்து அறிவியலாளர் ஹைசன் பர்க் இக்கோட்பாட்டை உருவாக்கி யுள்ளார். அணுவில் நடத்தப்பட்ட அந்த சோதனையை அறிவியலாளர் ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“ஒரு துகளின் எதிர்கால இடம் மற்றும் அதன் வேகம் ஆகியவைகளை ஒருவர் முன்னறிவிக்க வேண்டுமென்றால் அந்த நபரால் அந்தத் துகள்களின் தற்போதைய இடமும்,வேகமும் நுண்மையாக அளக்க இயல வேண்டும். இதைத் தெளிவாகச் செய்வதற்குரிய ஒரே வழி இப்பொருளின் மீது ஒளியைப் பாய்ச்சி பிராகாசிக்கச் செய்வதாகும். ஒளிக் கதிர்களில் சிலவற்றை அத்துகள் சிதறடித்து அது இருக்கும் இடத்தை அது அடையாளங்காட்டும். இருந்த போதிலும் ஒளிக் கதிர்களின் அலை முகடுகளுக்கு (Wave Crests) இடையிலுள்ள தூரத்தை விட நுண்மையாக அத்துகள் இருக்கும் இடத்தை ஒருவரால் அளக்க இயலாது. ஆகவே ஒரு துகளின் இருப்பிடத்தை நுண்மையாக ஒருவர் அளப்பதற்கு குறுகிய அளைநீளம் கொண்ட ஒளி அலைகள் தேவையாகிறது.

இப்போது ப்ளாங்கின் குவாண்டம் கருது கோளின் படி (Quantum Hypothesis) ஒருவர் அவருக்குத் தோன்றியபடி குறைந்த அளவு ஒளியைப் பயன்படுத்த முடியாது. அவர் குறைந்த பட்சம் ஒரு குவாண்டம் ஒளியைப் பயன்படுத்த வேண்டும் . இந்த குவாண்டம் அத்துகளைத் தொல்லைப்படுத்தி அதன் வேகத்தை அனுமானிக்க முடியாத படி மாற்றி விடுகிறது. அதுவும் தவிர துகளின் இருப்பிடத்தை மேலும் நுண்மையாக அளப்பதற்காக ஒருவர் மேலும் குறுகிய அலைநீளம் கொண்ட ஒளியைப் பயன்படுத்தும் போது அது தனி குவாண்டத்தின் ஆற்றலை அதிகமாக்கும். இதன் விளைவாகத் துகளின் வேகம் அதிக அளவு பாதிக்கப்படும். இதையே வேறு வார்த்தையில் “துகளின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக நீங்கள் அளக்க முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே துகளின் வேகத்தை உங்களால் அளக்க முடியும் எனக் கூறலாம். (பக்கம் :58-59)

துகளின் இருப்பிடத்தை அளக்க முயன்றால்அதே நேரத்தில் அத்துகளின் வேகத்தை துல்லியமாக அளந்தறிய முடியாது. எனவே இச்சோதனையிலிருந்து ஹைசன் பர்க் அவர்கள் மனிதனின் அறியும் ஆற்றலுக்கு மிக நிச்சயமாக ஒரு எல்லை உண்டு என்பதை நிரூபித்தார்.

லாப்லாசின் கொள்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி

மனிதனின் புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கு ஒரு எல்லை உண்டு என அறிவியல் வாயிலாக நிரூபித்த வெர்னர் ஹைசன் பர்க் அவர்களின் அநிச்சய தத்துவத்தின் கண்டுபிடிப்பு உண்மையிலேயே புரட்சிகரமான தத்துவமாக அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆயினும் பிரான்சு தேசத்து அறிவியலாளர் எம்.டி. லாப்லா (Marquis de Laplace) என்பவரின் அதுவரை புகழ்வாய்ந்த கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த அறிவியல் தீர்மானக் கோட்பாட்டால் (Scientific determinism) கவரப்பட்ட சிலர் அநிச்சய தத்துவத்தில் வெறுப்புடனேயே எதிர்கொண்டனர்.

லாப்லாசின் கோட்பாடு இப்பேரண்டத்தை முற்றிலுமாக தீர்மானிக்கின்ற (விவரிக்கின்ற) விதிகள் இருக்கின்றன என்றும் அந்த விதிகளை நாம் நெருங்கி வந்து கொண்டிருப்பதாகவும் கூறியது. எனவே இக்கோட்பாடு டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு போன்று இறைமறுப்பாளர்களைக் கவர்ந்தது. அவர்கள் பேரண்டம் என்பது முற்றிலுமாக நம்மால் விளங்கிக் கொள்ளக் கூடிய விதிகளால் உருவாகியுள்ளது. எனவே இதைப் படைப்பதற்கு இயற்கையை மீறிய மற்றொரு சக்தி தேவையில்லை என வாதிட்டனர். இந்த வாதத்தைத் தகர்த்து எறிகிறது ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம். இதைப் பற்றி ஹாக்கிங் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“நாம் பேரண்டத்தைப் பார்க்கின்ற விதத்திலேயே அநிச்சய தத்துவத்திற்கு ஆழமான சம்பந்தங்கள் (தாக்கங்கள்) உண்டு. இப்போது 50 வருடங்கள் கழிந்த பிறகும் கூட அவை பல தத்துவ ஞானிகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் கூட இது பெரும் விவாதத்திற்குக் கருப்பொருளாகவே இருக்கிறது. பேரண்டத்தின் தற்போதைய நிலையை ஒருவரால் சரியாக அளக்க முடியாவிடில் எதிர்காலத்தில் பேரண்டத்தில் நிகழப் போவதையும் அவரால் துல்லியமாகக் கூற முடியாது எனக் கூறும் அநிச்சய தத்துவம் அறிவியல் விதிகளால் முற்றிலும் தீர்மானிக்கப்பட்ட பேரண்டமாதிரி எனும் லாப்லாசின் அறிவியல் கனவை முடிவுக்குக் கொண்டு வந்தது.

நம்மால் இப்போதும் கூட தற்போதைய பேரண்டத்தைத் தெல்லைப் படுத்தாமல் அதைப் பார்த்தறியும் (Observe) இயற்கையை மீறிய ஒருவர் (Some super natural being) இருக்கிறார் என்றும் அவருக்கு அனைத்தையும் தீர்மானிக்கும் விதிகள் உண்டென்றும் கற்பனை செய்யலாம். இருப்பினும் அப்படிப்பட்ட பேரண்ட மாதிரியில் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அக்கறை (Interest) கொள்வதற்கு ஒன்றுமில்லை. (பார்க்க பக்கம் : 59)

நமது அறிவால் அறிய முடியாததும், இயற்கையை மீறிய அறிவின் அதிபதியால் மட்டும் செய்யப்படுவதுமாகிய பணியில் நாம் அக்கறை காட்டுவதால் எவ்விதப் பயன்பாடும் இல்லை என வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டில் மேலும் முக்கியமான இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

முதலாவது செய்தி பேரண்டத்தைப் புரிந்து கொள்ள நாம் செய்யும் முயற்சிகளே பேரண்டத்தின் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி அதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள இயலாத நிலையை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது. இதன் விளைவாக அநிச்சய தத்துவம் அனுமதிக்கும் எல்லைக்கப் பால் பேரண்டத்தைப் புரிந்து கொள்ள நாம் தீவிரமாக முயற்சி செய்தால் நம்மால் பேரண்டத்தைப் புரிந்து கொள்ள இயலாத நிலையும் தீவிரமடையும்.

எனவே பேரண்டத்தைப் புரிந்து கொள்வதில் நமக்கு மிகுதியான தவறுகள் ஏற்படுவதால் பேரண்டத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் செய்கின்ற தீவிர முயற்சிகளும் தோல்வி கண்டு பேரண்டத்தை அதன் யதார்த்த நிலையில் முற்றிலும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நமது எண்ணம் (அல்லது லாப்லாசின் அறிவியல் தீர்மானக் கனவு) ஒருகாலும் நிறைவேற வாய்ப்பில்லாமல் போகிறது.

இரண்டாவதாக ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம் நாம் வசித்துக் கொண்டிருக்கும் இப்பேரண்டம் நம்மால் முற்றிலும் விளங்கிக் கொள்ள முடிகின்ற விதிகளால் நிர்ணயிக்கப்பட்டதே எனும் லாப்லாசின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததில் பிரபஞ்சம் சாரா ஒருவனின் (பிரபஞ்சாதிதமானவன் – Super natural being) தலையீடு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே கால இடத்தின் எல்லை அற்ற அடர்த்தி மற்றும் வளைவில் (Infinite density and Curvature of Space – Time) சிங்குலாரிட்டிக்குப்பதில் அநிச்சய தத்துவத்தின் செயற்பாடே நடைபெறுவதாக இருந்தாலும் கூட பேரண்டப் படைப்பில் கடவுளின் தேவை தவிர்க்க முடியாதது ஆகும் என்பதும் ஹாக்கிங் அவர்களின் மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து தெரிய வருகிறது.

இருப்பினும் அநிச்சய தத்துவம் மெய்யான அறிவியல் கோட்பாடாக ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரு சிலர் கடவுள் பிரச்சனை வரும்போது அத்தத்துவத்திற்கு எதிராகச் சிந்தித்துக் கடவுளை மறுக்கும் போக்கைக் கடைபிடிக்கின்றனர் என்பது அபத்தமும் நகைப்பிற்குரிய முரண்பாடும் (Pradox) ஆகும்.

அபத்தமோ அபத்தம்

நமது உள்ளங்கைகளால் அள்ளக் கூடியதும் நமது ஆய்வுக் கூடங்களில் சோதிக்கப்படக் கூடியதுமாகிய அற்பப் பொருளாம் அணுவின் இயற்பியலைக் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் அந்த அணுவையே படைத்தவனும் உள்ளங்கைகளால் மட்டுமன்றி ஐம்புலன் களால் கூட உணர்ந்து பார்க்க முடியாதவனுமாகிய இறை வனின் இயற்பியல் – படைக்கப்படுதலுக்கு உட்படாம லிருக்கும் அவனது இயற்பியல் – தனக்கு விளங்கியே ஆக வேண்டுமென அடம் பிடிப்பது அறிவுடமையாகுமா?

கடவுளின் உள்ளமை முழுமையாக எனக்கு விளங்காத வரை (யாராலும் படைக்கப்படாமல் எப்படித் தோன்றினான்) அப்படி ஒரு கடவுள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாதவரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதன்றோ?

மனித உடல் செல்களால் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதையும் அந்தச் செல்கள் பற்பல விதமான அணுக்களால் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதையும் நாம் அறிவோம். எனவே மனித உடலும் கூட அணுக்களால் தோற்றுவிக்கப் பட்டவை யாகும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மனிதனுடைய சொந்த உடலை உருவாக்கிய பொருளைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக அவன் படைக்கப்பட்டுள்ளதை அறிவியல் அவனுக்கு நிரூபித்துக் காட்டிய பிறகும் அவனைப் படைத்தவ னாக ஒருவன் இருக்க வேண்டுமானால் அப்படைப்பாளனின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பதை அவனால் முழுமையாக விளங்கிக் கொள்ளும் விதத்திலேயே இருக்க வேண்டுமென வாதிடுவது அபத்தத்திலும் அபத்தமன்றோ!

அற்பப் பொருளாம் அணுவைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக மனிதனைப் படைத்த இறைவன் மனிதனைப் படைத்த தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் ஆற்றலுடன் மனிதனைப் படைத்திருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதை விட பேதமை வேறு என்ன இருக்க முடியும்?

பிரதான செய்திகள்

இத்தலைப்பில் நாம் இதுவரை விவாதித்தவைகளி லிருந்து மிக முக்கியமான 4செய்திகளை ஐயமற விளங்கிக் கொண்டோம். அவற்றுள் முதலாவது பேரண்டம் முழுவதும் அறிவியல் விதிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்பதும் ஆளும் விதிகளுக்கு பேரண்டம் அடிமைப் பட்டிருப்பதால் அது ஒரு படைப்பினமே அன்றி வேறில்லை என்பதாகும்.

இரண்டாவதாக இயற்கை என்பது பொருட்கள் அனைத் திற்குமுள்ள இயற்பியல் குணங்கள் யாவையும் உள்ளடக்கிய பெயராகும். எனவே பொருட்கள் எதுவும் இல்லையேல் இயற்கையும் இல்லை. இதிலிருந்து பேரண்டம் தோன்றுவ தற்கு முன் எதுவும் இருக்கவில்லையென பெருவெடிப்புக் கோட்பாடு கூறுவதால் பேரண்டம் தோன்றுவதற்கு முன் இயற்கை என்ற ஒன்று இருந்தது என்றும் பேரண்டத்தைத் தோற்றுவித்தது இயற்கையே என்ற வாதமும் பிழையானது; மேலும் அது பெருவெடிப்புக் கோட்பாட்டால் முறியடிக்கப் பட்டு விட்டது.

மூன்றாவதாக பெருவெடிப்புக்கு முன் ஏதாவது இருந்ததாக வைத்துக் கொண்டால் கூட அதற்கும் பெரு வெடிப்பிற்கும் இடையில் எத்தொடர்பும் இருக்க முடியாது என பெருவெடிப்புக் கோட்பாடு கூறுவதால் (பக்கம் – 50, எ ப்ரீஃப் ஹிடரி ஆஃப் டைம்) பேரண்டத்தைத் தோற்றுவித்தது இயற்கையே என்ற வாதம் எவ்வகையிலும் செல்லத்தக்க தில்லை என்பது.

நான்காவதாக மனிதன் விளங்குதிறனுக்கு ஒரு எல்லை உண்டு என்றும் அதற்கப்பால் உள்ளதை நம்மால் விளங்க முடியாது என்பதையும் ஹைசன் பர்க்கின் அநிச்சய தத்துவம் நிரூபித்துள்ளது. ஆகவே கடவுளின் `நிரந்தரன் (நுவநசயேட – தொடக்கமோ, முடிவோ இன்றி என்றென்றும் நிலைத் திருத்தல்) எனும் இயல்பு எவ்வாறு என நமக்கு விளங்க வில்லை என்பதற்காக இறைவளைன ஏற்க மறுப்பது அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரானதாகும். இவைகளை இந்த அத்தியாயத்தில் இது வரை நாம் விவாதித்தவை களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொண்டோம்.

மேற்கண்ட காரணங்களைத் தவிர கடவுளை ஏற்க வேண்டிய மற்றொரு இன்றியமையாத காரணத்தை முதல் இரண்டு அத்தியாயங்களில் நாம் கண்டுள்ளோம். நம்மால் புரிந்து கொள்ளப்படுகின்ற அறிவியல் விதிகளால் ஆளப்படுகின்ற இப்பேரண்டத்தைத் தோற்றுவித்த பெருவெடிப்பே கூட எவ்வாறு நிகழ்ந்தது என்பது இப்போது மட்டுமின்றி இனி எப்போதுமே நம்மால் தெரிந்து கொள்ள முடியாது என அறிவியல் வலியுறுத்தியும் கூட பெருவெடிப்பு நிகழ்ந்ததை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால் நாம் அறிந்த அறிவியல் விதிகள் ஒன்றுக்குக் கூட கட்டுப்படாத வனும் அதற்கு மாறாக அவ்விதிகளையே தோன்றுவித்து நிர்வகிப்பவனுமாகிய இறைவனை நம்ப வேண்டுமானால் மட்டும் இறைவனுடைய உள்ளமையின் (Existence) அறிவியல் தமக்கு விளங்க வேண்டுமென வாதிடுவது சமானமில்லாத ஈடு இணையற்ற பேதமையாகும் என்பதை யும் ஐயமறக் கண்டு விட்டோம்.