9) திருமறையின் வார்த்தைகள் வென்றே தீரும்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்-2

திருமறையின் வார்த்தைகள் வென்றே தீரும்

டூயிக் அவர்கள் தந்த மேற்கண்ட விளக்கத்திலிருந்து சூரியனும், விண்ணில் ஓடிக்கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் உண்மையை ஹெர்ஷல் எவ்வாறு கண்டு பிடித் தார் என்பதை அழகாக விளங்க முடிகிறது. மேற்கொண்டு நடைபெற்ற ஆய்வுகளின்போது சூரியன் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவதாகவும் பால் வழி மண்டலத் தின் மைய அச்சை ஒருமுறை சுற்றி வருவதற்கு சூரியன் 18 கோடி வருடங்களை எடுத்துக் கொள்வதாகவும் அறியப்பட்டுள் ளது. (பார்க்க : ஃபிஸிக் ஃபார் எவரி ஒன், பக்கம் 68 எனும் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு (அனைவருக்குமான இயற் பியல்) ஆசிரியர்கள் : எல் லாண்டாவோ, அ. கிட்டகரோட்கி, மிர் பதிப்பகம், மாகோ) மேலும் சூரியனின் இந்த விண்ணோட்டம் ஹெர்க்குலஸ் (Hercules) எனும் விண்மீன் கூட்டம் இருக்கும் திசை நோக்கியே நடைபெறுகிறது என்பதையும் இன்று நம்மால் அறிய நேர்ந்துள்ளது.

இவ்வாறு தாம் கோபர் நிக்க, கெப்ளர், கலீலியோ போன்ற அறிவியலாளர்களும் அவர்களைப் பின்பற்றி 1783 வரை வந்து சென்ற அறிவியலாளர்கள் அனைவரும் “சூரியன் அதன் வசிப்பிடத்தில் நகர்கிறது எனக் கூறிய திருக்குர்ஆனின் புரட்சிகரமான அறிவியல் பிரகடனத்தை மறுத்த போது, வில்லியம் ஹெர்ஷலால் அந்த அற்புதமான வசனம் உண்மை என உறுதியாக நிரூபிக்கப்பட்டு உலகின் தலை சிறந்த அமெச்சூர் விஞ்ஞானியாக புகழப்பட்டார்.

திருக்குர்ஆனின் தோற்றுவாய் பேரண்டத்தைச் சூன்யத்திலிருந்து படைத்த இறைவனே என்பதை ஏற்பதில் இதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும்? இப்புத்தகத்தில் நாம் இதுவரை கூறியுள்ள விபரங்களைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் இந்த வேத புத்தகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளில் பல இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் தோன்றிய ஒரு மனிதரால், அவர் எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் கூறி இருக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் செய்தியாகும்.

விஞ்ஞானத்தின் பிரதான துறைகளைச் சார்ந்த மேலும் நூற்றுக்கணக்கான அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. எனவே திருக்குர்ஆனை வாசிக்கும் போது புண்ணியத்தைக் கருத்தில் கொண்டு வாசிப்பதை போன்று வசனங்களின் ஆழங்களுக்கு இறங்கிச் சென்று அது கூறும் செய்திகளை விளங்கிக் கொள்ள முயற்சிக்கவும் வேண்டும். அவ்வாறான வாசித்தலே முழுமையான பயனை அளிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் திருக்குர்ஆனை எவ்வளவு முறை வாசித்தோம் என்ற கணக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்காமல் திருக்குர்ஆனில் என்ன விளங்கிக் கொண்டோம் என்ற கணக்கைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் எனும் நூலின் இரண்டாம் பாகம் இங்கு நிறைவடைகிறது. இந்நூலில் நாம் விவாதித்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் எந்த அளவிற்கு ஆழமாக, திருக்குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டதும், இறை ஞானத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்த்து சரியாக முடிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குற்றம் குறைகள் ஏதேனும் தென்பட்டால் சுட்டிக் காட்டும்படியும் அவைகளை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொள்வேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான பாதையைக் காட்டத் துணை புரிவானாக