70) மறுமையில் தங்களது முதுகில் பாவச் சுமையை எதனால் சுமப்பார்கள்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மறுமையில் தங்களது முதுகில் பாவச் சுமையை எதனால் சுமப்பார்கள்?
பதில் :
அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நட்டமடைந்து விட்டனர். திடீரென யுகமுடிவு நேரம் அவர்களிடம் வரும்போது “உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே” என்று கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள். கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.
அல்குர்ஆன் : 6 – 31