69) முந்தைய சமுதாயம் அழித்ததற்குரிய காரணம் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
முந்தைய சமுதாயம் அழிந்ததற்குரிய காரணம் என்ன வென்று இறைவன் கூறுகிறான்?
பதில் :
இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம். வானத்தை அவர்கள் மீது தொடர்ந்து மழைபொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம்.
அல்குர்ஆன் : 6 – 06