65) இஹ்ராம் அணிந்தவர்கள் மாமிசத்தை உண்ணலாமா?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
இஹ்ராம் அணிந்தவர்கள் விளங்கினங்களின் மாமிசத்தை உண்ணலாமா? மீன் சாப்பிடலாமா?
பதில் :
இஹ்ராம் அணிந்தவர்கள் எல்லாவற்றையும் சாப்பிடலாம் தரையில் வேட்டையாடுவதுதான் அவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் :
உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும்போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் : 5 – 96