64) சத்தியம் செய்து அதை நிறைவேற்றா விட்டால் என்ன பரிகாரம் செய்வது?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

கேள்வி :

திட்டமிட்டுச் சத்தியம் செய்து அதை நிறைவேற்றா விட்டால் என்ன பரிகாரம் செய்வது? 

பதில் : 

  1. பத்து ஏழைக்கு உணவளித்தல் 
  2. அலல்து அவர்களுக்கு ஆடை அணிவித்தல் 
  3. அல்லது அடிமையை உரிமை விடுதல் 
  4. இம்மூன்று செய்யாவிட்டால் மூன்று நாள் நோன்பு நோற்பது 

ஆதாரம் : 

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் : 5 – 89