25:34 வசனத்திற்கு நபியின் விளக்கம்

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

நரகத்தை நோக்கி எவர் தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்பட விருக்கின்றார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிகத் தவறானதாகும் எனும் (அல்குர்ஆன்: 25:34) ஆவது) இறைவசன(த்திற்கு நபியின் விளக்க)ம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமனிதர் அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச்செல்லப்படுவானா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் அவனை இருகால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா? என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக! என்று சொன்னார்கள்.

(புகாரி: 4760)

(மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தனது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவான்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (அல்குர்ஆன்: 25:34)ஆவது இறைவசனத்தின்படி) மறுமை நாளில் இறைமறுப்பாளர் தமது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இம்மையில் அவனை இரு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமை நாளில் அவனை அவனது முகத்தால் நடக்கச் செய்ய முடியாதா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

(இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், “ஆம் (முடியும்), எங்கள் இறைவனின் வல்லமை மீதாணையாக!” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(முஸ்லிம்: 5406)