நபியை காயப்படுத்தியவர்கள் எப்படி வெல்வார்கள் என்ற போது
”அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ (என்ற(அல்குர்ஆன்: 3:128) ➚-வது இறைவசனம்)”
அனஸ் (ரலி) கூறினார்கள்:
உஹுதுப் போரன்று நபி(ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது ‘தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி வெல்லும்?’ என்று (மனமுடைந்தவர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போதுதான் ‘(நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை…” என்ற (அல்குர்ஆன்: 03:128) ➚-வது) வசனம் அருளப்பட்டது.
மேல உள்ள செய்திக்கு முரணாக இருப்பதால், கீழ்காணும் செய்திகளை தவிர்க்கவும்.
4069. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.
(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, `சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு – ரப்பனா வல(க்)கல் ஹம்து` என்று கூறியதற்குப் பின்னால், நபி(ஸல்) அவர்கள், `இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், `அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என்னும் (அல்குர்ஆன்: 03:128) ➚-வது) வசனத்தை இறக்கியருளினான்.
சாலிம் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்டபோது எதிரிகளான) ஸஃப்வான் இப்னு உமய்யா, சுஹைல் இப்னு அம்ர், ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, `அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற(அல்குர்ஆன்: 3:129) ➚-வது வசனம்) அருளப்பட்டது.