60) அல்லாஹ் தடை செய்த விலங்கினங்கள் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
அல்லாஹ் தடை செய்த விலங்கினங்கள் என்ன?
பதில் :
- தாமாகச் செத்தவை,
- இரத்தம்,
- பன்றியின் இறைச்சி,
- அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
- கழுத்து நெரிக்கப்பட்டவை,
- அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை,
- (தமக்கிடையே) மோதிக்கொண்டவை,
- வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.)
- பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும்,
- அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்
அல்குர்ஆன் : 5 – 03