7 வருடம் பாங்கு சொன்னால் நரகிலிருந்து விடுதலை
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”யார் நன்மையை எதிர்பார்த்து ஏழுவருடங்கள் பாங்கு சொல்வாரோ அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை வழங்கப்படும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள் : திர்மிதீ (190), இப்னுமாஜா (719),தப்ரானீ-கபீர்,பாகம் :9, பக்கம்:290
இந்தச் செய்தியில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஜாபிர் பின் யஸீத் பின் அல்ஹாரிஸ் அல்ஜஅஃபீ என்பவர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.
ஜாபிர் ஒரு பொய்யர் என்றும் இவருடைய செய்திகளை பதிவுசெய்யக்கூடாது என்று யஹ்யா பின் மயீன் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ்துறையில் விடப்பட்டவர் என்றும் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் இவருடைய செய்திகளை பதிவு செய்யக்கூடாது என்று இமாம் நஸாயீ குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் :2, பக்கம் : 41)
எனவே, இது பலவீனமானதாகும்.