10) ருகூவில் கைகளை வைக்கும் முறை
முக்கிய குறிப்புகள்:
நாஸிக் - மன்ஸூக்
முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் அவர்கள் கூறியதாவது:
நான் (தொழுகையில்) இவ்வாறு (கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு) ருகூஉச் செய்தபோது என் தந்தை, “நாங்கள் இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்’’ என்று சொன்னார்கள்.
தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முதலில் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு முழங்கால்கள் மீது வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.