7) சீடர்களுக்கு அறிவித்ததில் முரண்பாடு
7) சீடர்களுக்கு அறிவித்ததில் முரண்பாடு
இயேசுவின் கல்லறை அருகில் இருந்த இரண்டு தூதர்கள் இரண்டு மரியாள்களிடமும் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை சீடர்களுக்குச் சொல்லும் படியும் இயேசுவை கலிலேயா எனும் ஊரில் சந்திப்பீர்கள் என்றும் சீடர்களிடம் கூறச் சொன்னதாக மத்தேயு கூறுகிறார். மாற்குவும் (16:7) இதைக் கூறுகிறார்.
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்;
இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
மத் 28:6,7,8
நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்; உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள்.
(மாற்கு 16:7,8)
தேவதூதர்கள் சொன்ன படி அந்தப் பெண்கள் சீடர்களுக்கு அதை அறிவித்தார்கள் என்று மத்தேயு கூறுகிறார், ஆனால் அவர்கள் பயந்திருந்ததால் சீடர்களுக்கு அறிவிக்கவில்லை எனக் கூறி மத்தேயுவுடன் முரண்படுகிறார்.
சீடர்கள் வந்த நோக்கம்
இயேசுவின் உடலை யாரோ கடத்திச் சென்று விட்டார்களா என்பதைப் பார்க்க சீடர்கள் ஓடி வந்தார்களா? இயேசு உயிர்த்தெழுந்ததை உறுதி செய்வதற்காக வந்தார்களா என்பதிலும் முரண்பாடு உள்ளது.
இயேசு உயித்தெழுந்தார் என்று தூதர்கள் கூறியதை அந்தப் பெண்கள் சீடர்களிடம் கூறிய போது சீடர்கள் அதை நம்பவில்லை எனவும், அதை உறுதி செய்வதற்காக பேதுரு கல்லறைக்கு வந்ததாக லூக்கா கூறுகிறார்.
இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண் பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்து பார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக் கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக் கொண்டு போனான்.
லூக்கா 24:11,12
ஆனால் யோவான் இது பற்றிக் கூறும் போது இயேசுவின் உடலை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டதாக மகதலேனா மரியாள் சொன்னதை உறுதி செய்யவே பேதுருவும் இன்னொரு சீடரும் வந்ததாகக் கூறுகிறார்.
உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். யோவான் 20:2,3
சீடர்களைப் பார்க்காமல் மேலுலகம் சென்றாரா? பார்த்தபின் சென்றாரா?
கலிலேயா என்ற ஊரில் சீடர்களைச் சந்திக்கவிருப்பதாக அந்தப் பெண்கள் மூலம் தூதர்கள் சொல்லி அனுப்பினார்கள் என்று மூன்று சுவிஷேசங்கள் கூறுகின்றன.
இவர்கள் மூவருக்கும் மாற்றமாக யோவான் மகதலேனா மரியாளுக்கு காட்சி தந்த இயேசு அவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மேலுலகம் ஏறிச் சென்றதாகவும் இதை சீடர்களிடம் தெரிவிக்குமாறு இயேசு கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
யோவான் 20:18
அதாவது இயேசு உயிர்த்தெழுந்த பின் மகதலேனா மரியாளுக்கு காட்சி தந்தவுடன் மேலுலகம் ஏறிச் சென்று விட்டார் என்கிறார்.
இயேசுவைத் தரிசித்தவர் எத்தனை பேர்?
இயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த பின் அவரைச் சந்தித்தவர்கள் குறித்த தகவலிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இயேசு உயிர்த்தெழுந்தவுடன் இரண்டு மரியாள்கள் முன்னே தோன்றி அவர்களுக்கு இயேசு காட்சி தந்தார் என்று மத்தேயு கூறுகிறார்.
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிற போது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்ட வந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத் 28:9
மாற்குவின் கூற்றுப்படி மகதலேனா மரியாளுக்கு மட்டும் இயேசு தரிசனமானார்.
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்;.
மாற்கு 16:9
இரண்டில் எது உண்மை?
மரிக்காத சீடன் மரித்தது ஏன்?
இயேசு மேலுலகம் சென்ற பின் மீண்டும் வந்து சிலருக்கு காட்சி தந்தார் என்று யோவான் கூறுகிறார். இதை மற்ற சுவிஷேசக்காரர்கள் கூறவில்லை. அவ்வாறு அவர் தரிசனம் தந்த போது ஒரு சீடன் தன் பின்னே வருவதைக் கண்டார். இது குறித்து யோவான் கூறும் போது
பேதுரு திரும்பிப் பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம் பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்;
அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சி கொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
(யோவான் 21:20-24)
அவன் மரிப்பதில்லை என்பதற்கும் இயேசு வரும் வரை அவன் உயிரோடு இருப்பான் என்பதற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் இயேசு வரும் வரை இருப்பான் என்று சொல்லப்பட்ட அந்தச் சீடன் எங்கேயும் காணோமே? அவன் இருந்திருந்தால் இரண்டாயிரம் வயதுடையவனாக இருக்க வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக வசிக்கும் அந்த மனிதன் எங்கே இருக்கிறான்? அப்படி யாரும் இல்லாவிட்டால் இயேசு கூறியதாக யோவான் கூறியது பொய்யாகிவிடும். இது பொய் என்றால் அவர் கூறிய ஒட்டு மொத்த சம்பவமும் சந்தேகத்துக்கு உரியதாகி விடும்.
உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள்
இயேசு சிலுவையில் அறையப்பட்டவுடன் அனைத்துக் கல்லறைகளும் திறக்கப்பட்டு அதில் நித்திரை அடைந்திருந்த அநேகரின் உடல்களும் கல்லரையை விட்டு வெளியேறியதாக பைபிள் கூறுகிறது.
கல்லறைகளும் திறந்தது நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
மத் 27:52
அவர் உயிர்த்தெழுந்த பின்பு இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
மத் 27:53
மனிதர்களின் பாவத்தைச் சுமப்பதற்காக இயேசு தன்னைத் தானே பலி கொடுத்ததால் மரணித்த பின் உயிர்த்தெழுந்தார் என்று பவுலின் கொள்கை கூறுகிறது. ஆனால் மத்தேயுவோ இது ஒரு சாதாரண சம்பவம் என்கிறார்.
இயேசு மட்டும் இல்லாமல் இன்னும் அநேகர் கல்லறையை விட்டு வெளியேறியதாகவும் இயேசுவைப் பார்த்தவர்களை விட அநேகர் இதைப் பார்த்த்தாகவும் கூறுகிறார்.
இறந்த பின் உயிர்த்தெழுதல் என்று ஒன்று இருந்தால் அது இயேசுவுக்கும் மட்டும் உள்ள சிறப்புத் தகுதி இல்லை என்பதே பைபிள் கூறும் தத்துவம். மனிதர்களின் பாவங்களைச் சுமக்க தன்னைத் தானே பலியிட்டுக் கொண்டதால் உயிர்த்தெழுந்தார் என்பது கட்டுக் கதை என்பது இதில் இருந்து உறுதியாகிறது.
இயேசு மூன்றால் நாளில் உயிர்த்தெழுந்ததை விட பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுந்தது தான் அதிக ஆச்சரியமானதாகும். ஏனெனில் இறந்து பல ஆண்டுகள் கடந்தவர்களும் அவர்களில் இருப்பார்கள். மூன்றாம் நாளில் எழுவதை விட மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் எழுந்தது தான் அதிக ஆச்சரியம்.
இரத்தமும் சதையும்
இயேசு மீண்டும் உயிர்த்து எழுந்து தனது சீடர்களுக்கு காட்சி தந்திருந்தால் அவர் ஆவியாகத் தான் இருக்க முடியும். ஆனால் சீடர்களுக்கு அவர் காட்சி தந்த போது உடலுடன் காட்சி தந்தது மட்டுமின்றி நான் ஆவி அல்ல என்றும் கூறி இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது.
இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
நான் தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள்;. நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று நான் உங்களோடிருந்த போது உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
லூக்கா 24:36-44
தனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காட்டி தான் ஆவி அல்ல என்று இயேசு நிரூபிக்கிறார். மேலும் மீனையும் தேனையும் சாப்பிட்டு விட்டு அதன் மூலம் தான் ஆவியல்ல என்று நிரூபித்துக் காட்டுகிறார்.
இதில் இருந்து தெரிய வருவது என்ன? இயேசு சிலுவையில் அறையப்படாமல் சாபத்துக்கு உரிய அந்த மரணத்தில் இருந்து தப்பித்து ஓடி வந்துள்ளார் என்பது உறுதியாகிறது.
களவாடப்பட்ட இயேசுவின் உடல்
இயேசு சிலுவையில் அரையப்பட்ட காலத்தில் அவர் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கவில்லை. மாறாக அவரது உடலை அவரது சீடர்கள் திருடிச் சென்று விட்டு அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும் சீடர்களுக்குக் காட்சி தந்தார் என்று கதை கட்டியதாகவும் தான் அன்றைய மக்கள் நம்பினார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய் என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
மத்தேயு 28:10
அவர்கள் போகையில் காவல் சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
மத்தேயு 28:11
இவர்கள் மூப்பரோடே கூடி வந்து ஆலோசனை பண்ணி சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து.
மத்தேயு 28:12
நாங்கள் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவனைக் களவாய்க் கொண்டு போய் விட்டார்கள். என்று சொல்லுங்கள்.
மத்தேயு 28:13
இது தேசாதிபதிக்குக் கேள்வியானால் நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
மத்தேயு 28:14
அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
மத்தேயு 28:15
மக்கள் அப்படி பேசிக் கொண்டதை மறுக்க முடியாத சுவிஷேசக்காரர்கள் யூதர்கள் பணம் வாங்கிக் கொண்டு இவ்வாறு கதை கட்டியதாக எழுதி வைத்துள்ளனர்.
உடலைக் காணவில்லை என்பது யதார்த்தமான உண்மை. இதைக் கூறுவதற்கு யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள். செத்தவர் உயிர்த்தெழுந்தார் என்பது இயற்கைக்கு மாறானது. ஆதாரமற்றது.
இதைக் கூறுவதற்குத் தான் பணம் கைமாறி இருக்கும். சிலருக்குப் பணம் கொடுத்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கதை கட்டி விட்டு உண்மையைப் பொய்யாகச் சித்தரிக்கிறார்கள.
இயேசு உயிர்த்து எழுந்திருந்தால் அவரது குடும்பத்துப் பெண்கள் சிலருக்கும் அவரது சீடர்களுக்கும் மட்டும் காட்சி தந்திருக்க மாட்டார். எந்த மக்கள் அவரைச் சந்தேகப்பட்டு பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிலுவையில் அறைந்து கொலை செய்தார்களோ அவர்கள் நம்பும் வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் அவர் தோன்றி இருக்க வேண்டும்.
அப்படித் தோன்றி இருந்தால் சீடர்கள் உடலைக் களவாடிச் சென்று விட்டனர் என்று யூதர்கள் கருதி இருக்க மாட்டார்கள். இதுவும் உயிர்த்து எழுந்தது கட்டுக் கதை என்பதை நிரூபிக்கின்றது.
செத்தவர் உடலில் இரத்தம்
சிலுவையில் அறையப்பட்டது குறித்த மற்றொரு தகவலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து அவர் மரித்திருக்கறதைக் கண்டு அவருடைய கால் எழும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச் சேவகர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
யோவான் 19:33,34
கிறித்தவ நம்பிக்கையின் படி-பைபிளின் கூற்றுப்படி- இயேசு சாதாரணமாக மரிக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கிறார். இவ்வாறு சிலுவையில் அறையப்பட்டதனால் அவரது உடலிலிருந்த இரத்தம் முழுமையாக வெளியேறி இருக்கும்.
அதன் பின்னர் அவர் மரித்து விட்டதால் ஏதேனும் இரத்தம் அவர் உடலில் மீதமிருந்தால் அதுவும் உறைந்து போயிருக்கும். இவ்வாறு இருக்கும் போது இற்ந்து போன இயேசுவின் உடலில் ஈட்டியால் குத்திய போது அவர்து உடலில் இருந்து இரத்தம் வெளிப்பட்டது என்று யோவான்கூறுவதும் இதில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
சீடர்களுக்கு இயேசு கூறியது பொய்யானது ஏன்
இயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும் நோய்களைப் போக்குவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
மாற்கு 16:17
சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
மாற்கு 16:18
உயிர்த்தெழுந்த இயேசு மேற்கண்டவாறு கூறி இருந்தால் அது நிச்சயம் நடக்க வேண்டும். இயேசு பொய் கூற மாட்டார். கிறித்தவ மக்கள் இயேசு உயிர்த்தெழுந்து மேற்கண்டவாறு கூறியதை சோதித்துப் பார்க்க வேண்டும். விஷத்தைக் குடித்தாலும் போதகர்கள் சாக மாட்டார்கள் என்று இதில் கூறப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு நாம் விஷத்தைக் கொண்டு வருகிறோம். அதை கிறித்தவ போதகர்கள் மக்கள் மத்தியில் குடித்துக் காட்டி சாகாமல் இருந்து காட்டத் தயாரா? ஒருவர் கூட இதற்குத் தயாராக இல்லாவிட்டால் இயேசு இப்படிக் கூறியிருக்க மாட்டார் என்பது உறுதியாகிறது.
அவர் உயிர்த்தெழவில்லை என்பதும் உறுதியாகின்றது. இயேசு செத்த பின் உயிர்த்தெழவில்லை என்பதற்கு இதையே அறைகூவலாக கிறித்தவ போதகர்களுக்கு நாம் முன் வைக்கிறோம்.
பர்னபா சுவிஷேசம்
பைபிளின் நான்கு சுவிஷேசங்கள் போல் இன்னும் பலரும் எழுதினார்கள். பவுல் உண்டாக்கிய கோட்பாட்டுக்கு அவை சம்மட்டி அடியாக இருந்ததால் அவற்றை வேத புத்தகத்தில் இருந்து கிறித்தவர்கள் நீக்கி விட்டனர். அவற்றுள் முக்கியமானது பர்னபா என்பவர் எழுதிய சுவிஷேசமும் ஒன்றாகும்.
பர்னபா சுவிஷேசம் மற்ற அனைத்து சுவிஷேசங்களில் இருந்தும் சிறப்புற்றதாகும். ஏனெனில் மற்ற சுவிஷேசக்காரர்கள் இயேசுவின் நேரடிச் சீடர்களாக இருக்கவில்லை. இது குறித்து முன்னர் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பர்னபா இயேசுவின் நேரடிச் சீடராக இருந்தார். இயெசுவைச் சிலுவையில் அறையத் தேடிய போது என்ன நடந்தது என்பதை இவர் நேரடியாகப் பார்த்தவர்.
நான்கு சுவிஷேசம் எழுதியவர்களும் அப்போது நடந்ததை தாங்கள் நேரடியாகப் பார்த்ததாகக் கூறவில்லை. கேள்விப்பட்டதையும் யூகித்ததையும் தான் எழுதினார்கள். ஆனால் பர்னபா, நான் சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவன் என்று கூறுகிறார்.
கீழே நாம் எடுத்துக் காட்டிய மேற்கோளில் இருந்தும் இவர் இயேசுவின் சீடர் என்பதை அறியலாம்.
நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது என்று பர்னபா கூறுகிறார். தன்னையும் மற்ற சீடர்களையும் உள்ளடக்கி நாங்கள் அனைவரும் நினைத்தோம் என்று கூறுகிறார். இவர் இயேசுவின் நேரடியான சீடர் என்பதற்கு இதுவே சான்று.
இவரது சுவிஷேசத்தை வேதப் புத்தகத்தில் இருந்து தூக்கி வீசியது போல் இவரையும் பன்னிரண்டு சீடர்களில் இருந்து தூக்கி விட்டனர். இவரை இயேசுவின் சீடரான மாற்குவின் சீடர் என்று ஒரு படி இறக்கி விட்டனர்.
பர்னபா என்பவர் பவுல் காலத்தில் அவருடன் இணைந்து போதனை செய்தவர். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர். இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவர் எழுதிய சுவிஷேசம் கூறுவதால் இவரது சுவிஷேசத்தை வேதப்புத்தகத்தில் இருந்து நீக்கி விட்டனர்.
பர்னபா பற்றி பைபிளில் காணப்படும் குறிப்புகள் அவரது முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக் கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக் கொண்டு போய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
அப்போஸ்தலர் நடபடிகள் 9:27
எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக் குறித்துக் கேள்விப்பட்ட போது, அந்தியோகியா வரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்ட போது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான். அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்;
அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப் போய், அவனைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்தான். அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினாட்;கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
(அப்போஸ்தலர் நடபடிகள் 11:21-26)
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனே கூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிற போது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்து விடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் நடபடிகள் 13:1,2
அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனே கூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவ வசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
அப்போஸ்தலர் நடபடிகள் 13:7
ஜெப ஆலயத்தில் கூடின சபை கலைந்து போன பின்பு, யூதரிலும் யூத மார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலை கொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்தி சொன்னார்கள்.
அப்போஸ்தலர் நடபடிகள் 13:43
அடுத்த ஓய்வு நாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவ வசனத்தைக் கேட்கும்படி கூடி வந்தார்கள். யூதர்கள் ஜனக் கூட்டங்களைக் கண்ட போது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிற படியினால், இதோ, நாங்கள் புறஜாதியரிடத்தில் போகிறோம்.
நீர் பூமியின் கடைசி பரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேத வாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.
அப்போஸ்தலர் நடபடிகள் 13:44-47
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங் கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சில நாளைக்குப் பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப் பார்ப்போம் வாரும் என்றான்.
அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர் கொண்ட யோவானைக் கூட அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றான்.
(அப்போஸ்தலர் நடபடிகள் 15:37)
பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடே கூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்றான். இதைப் பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
பர்னபா மாற்குவைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறிச் சீப்புரு தீவுக்குப் போனான். பவுலோ சீலாவைத் தெரிந்து கொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.
அப்போஸ்தலர் நடபடிகள் 15:38-41
பதினாலு வருஷம் சென்ற பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக் கொண்டு பர்னபாவுடனே கூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.
கலாத்தியர் 2:1
எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்த போது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து, தரித்திரரை நினைத்துக் கொள்ளும்படிக்கு மாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.
கலாத்தியர் 2:9,10
பவுலுக்கு நிகராகவும் அவரை விட மேலாகவும் இருந்த பர்னபா எழுதிய சுவிஷேசத்தில் சிலுவை மரணம் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)
பர்னபாஸின் சுவிஷேசம் 222 அதிகாரங்களைக் கொண்டது. இதில் இயேசுவை சிலுவையில் அறைவதற்காக எதிரிகள் திட்டமிட்ட போது என்ன நடந்தது என்பதை 215 முதல் பர்னபா விரிவாக விளக்குகிறார். அதில் 215, 216 217 ஆகிய அதிகாரங்களை மட்டும் கீழே தருகிறோம்.
பர்னபாவின் சுவிஷேசத்தை ஆங்கிலத்தில் முழுமையாக காணலாம்.
When the soldiers with Judas drew near to the place where Jesus was, Jesus heard the approach of many people, wherefore in fear he withdrew into the house. And the eleven were sleeping.
Then God, seeing the danger of his servant, commanded Gabriel, Michael, Rafael, and Uriel, his ministers, to take Jesus out of the world.
The holy angels came and took Jesus out by the window that looketh toward the South. They bare him and placed him in the third heaven in the company of angels blessing God for evermore..
இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்த போது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டார். வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பயத்தின் காரணமாக அவர் வீட்டிற்குள் பின்வாங்கிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர்.
அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவைப் பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்குக் கட்டளையிட்டார்.
தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக் கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
216. Judas entered impetuously before all into the chamber whence Jesus had been taken up. And the disciples were sleeping. Whereupon the wonderful God acted wonderfully, insomuch that Judas was so changed in speech and in face to be like Jesus that we believed him to be Jesus. And he, having awakened us, was seeking where the Master was. Whereupon we marvelled, and answered: ‘Thou, Lord, art our master; hast thou now forgotten us?’
And he, smiling, said: ‘Now are ye foolish, that know not me to be Judas Iscariot!’
And as he was saying this the soldiery entered, and laid their hands upon Judas, because he was in every way like to Jesus.
We having heard Judas’ saying, and seeing the multitude of soldiers, fled as beside ourselves.
And John, who was wrapped in a linen cloth, awoke and fled, and when a soldier seized him by the linen cloth he left the linen cloth and fled naked. For God heard the prayer of Jesus, and saved the eleven from evil..
இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர்.
அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான்.
அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்குப் பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!”
இப்படிக் கூறிக் கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம்.
நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த யோவான் எழுந்து ஓடிய போது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்த போது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும் தீமையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.
217. The soldiers took Judas and bound him, not without derision. For he truthfully denied that he was Jesus; and the soldiers, mocking him, said: ‘Sir, fear not, for we are come to make thee king of Israel, and we have bound thee because we know that thou dost refuse the kingdom.’
Judas answered: ‘Now have ye lost your senses! Ye are come to take Jesus of Nazareth, with arms and lanterns as [against] a robber; and ye have bound me that have guided you, to make me king!’
படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்பட வேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம்.
அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”
இப்போது நீங்கள் உங்கள் மதியை இழந்து விட்டீர்கள். நீங்கள் ஒரு திருடனைப் (பிடிப்பது) போல் நாஸரேத்துடைய இயேசுவைப் பிடிப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் விளக்குகளுடன் வந்துள்ளீர்கள். உங்களுக்கு வழிகாட்டிய என்னையே அரசனாக்குவதற்காக நீங்கள் பிடித்து வைத்துள்ளீர்கள்” என்று யூதாஸ் பதிலளித்தான்.
இது குறித்து கிறித்தவ குருமார்கள் பதில் அளிக்கும் போது பர்னபா சுவிஷேசம் என்பது முஸ்லிம்களின் கற்பனை என்ற ரெடிமேட் பதிலைக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இதர்கு அவர்கள் எவ்வித ஆதாரத்தையும் காட்டுவதில்லை.
பர்னபாவின் சுவிஷேசத்தை கிறித்தவ குருமார்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் ஏற்றுக் கொண்ட ஆதாரங்கள் மூலமே சிலுவைப் பலி சித்தாந்தம் தவிடு பொடியாகியுள்ளதை மறுக்க முடியாது.