6) முடிவுரை
6) முடிவுரை
இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மூலம் கீழ்க்கண்ட உண்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எந்த மனிதனுக்கும் அற்புதம் செய்யும் ஆற்றல் வழங்கப்படவில்லை. நபிமார்களுக்கு மட்டும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் நினைத்த நேரத்தில் செய்து காட்ட முடியாது. அல்லாஹ் அனுமதி அளிக்கும் போது மட்டும் தான் செய்ய முடியும்.
நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் தவிர மற்ற விஷயங்ககளின் அவர்கள் மற்ற மனிதர்களைப் போலவே இருந்தனர். நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி பெறும் வாசல் அடைக்கப்பட்டுள்ளதால் நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் இந்த அற்புதத்தைச் செய்ய முடியாது.
இப்லீஸ், தஜ்ஜால் போன்று அல்லாஹ்வால் அனுமதி கொடுக்கப்பட்டதாக தெளிவான ஆதாரம் யார் விஷயத்தில் உள்ளதோ அவர்களும் அனுமதி பெற்றவர்கள் என்ற பட்டியலில் அடங்குவார்கள். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் நிகழும் அற்புதங்களும் உள்ளன. யாரிடம் அந்த அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கே தெரியாமல் இது நடக்கும். இந்த வகை அற்புதங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
தர்காக்களில் அற்புதம் நடப்பதாகக் கூறுவது ஆதாரமற்ற கற்பனையாகும்.
இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டால் அல்லாஹ்வுக்கு சமமாக மனிதர்களைக் கருதும் மாபாதகச் செயலில் இருந்து நாம் விடுபடலாம்.